Kerala: திருமணத்தை மீறிய உறவு! கணவனுக்கு காப்பு மாட்ட கஞ்சா செடி ப்ளான்! பெண் கவுன்சிலர் கைது!

கேரளாவைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் கணவர் மீது போய் புகார் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

கேரளா மாநிலம் இடுக்கி பகுதியில் சவுமியா சுனில்(34) என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் மீது இவர் போலியாக குற்றச்சாட்டு ஒன்றை கூற முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

 

இடுக்கு பகுதியில் இருக்கும் சவுமியா சுனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த வினோத் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வினோத் என்ற நபர் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். சுவுமியாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது என்பதால் தன்னுடைய கணவரிடம் பிரிய ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். 


அதன்படி தன்னுடயை கணவர் சுனிலின் பைக்கில் போதை பொருள் செடி ஒன்றை இவர் வைத்தாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வந்து சுனிலுடைய வாகனத்தை சோதனை செய்த போது அதில் போதை பொருள் செடி இருந்துள்ளது. அதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவருக்கும் அந்தச் செடிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

 

இதைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளித்த நபர் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அந்த நபரின் தொலைப் பேசி எண் சுனில் மனைவிக்கு தொடர்பு செய்தது தெரியவந்தது. இந்த தகவலை வைத்து காவல்துறையினர் சுவுமியாவிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் தன்னுடைய திட்டம் தொடர்பாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதாவது அவருக்கும் வினோத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு இடையூராக இருந்த கணவரை இந்தத் திட்டம் மூலம் காவல்துறையில் சிக்க வைத்துவிட்டு வினோத் உடன் வாழ இவர் முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார். 

 

திருமணத்தை மீறிய உறவு காரணமாக உள்ளாட்சி கவுன்சிலர் ஒருவர் இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு போதை பொருள் செடியை விற்றவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நபர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க:செல்போனில் பெண்களின் நிர்வாணப்படம்! 50க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை! சிக்கிய நபர்!

Continues below advertisement