ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.


மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார்.


சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 


இந்த அறிவிப்புக்கு முன்பே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் ஏபிபி நாடு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்பு ஏபிபி நாடு வெளியிட்ட செய்தி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் - விரைவில் அறிவிப்பு…


அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


இடைத்தேர்தல்:


2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில், ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ( ஜனவரி.22 ), மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மீண்டும் களத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்:


ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கோபி செட்டிப்பாளையும் MP-ஆகவும் இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தற்போது இருக்கும் ஈவிகேஎஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மீண்டும் சட்டமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதன் மூலம் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி:


இந்த அறிவிப்புக்கு முன்பு பல தகவல்கள் பரவி வந்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என்று பரவியது. மேலும் திருமகனின் மனைவி பூர்ணிமா போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. 


இந்நிலையில், காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் தொடர்பாக சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து, மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.


இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பாக, எந்த கட்சி களமிறங்கும், யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Also Read: Erode East By Election: இடைத்தேர்தலில் நான் களமிறங்குகிறேனா? முதலில் பாஜக போட்டியிடுகிறதா என்பதை பார்க்க வேண்டும்: அண்ணாமலை…


Also Read: CM Stalin: மறைந்த திருமகன் ஈவெரா உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்….