கடந்த ஜுலை 29 -ம் தேதி திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக  முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணி முன்னெடுக்கும் பணிகளை பாராட்டி, புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார்.  தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல் முதல் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக முன்னெடுத்த பிரச்சாரங்கள் குறித்தும் பேசினார்.


Asian Games 2023 Live: ஆசிய விளையாட்டு போட்டி: டென்னிஸில் இந்திய வீரர்கள் வெற்றி




அப்போது அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான  கழகத்தின் மீது ஆர்வமுடன் இருக்கும் 15 முதல் 35 வரை அணியில் இணைக்கும் விதமாக நிறைவேற்றிய இல்லம் தோறும் இளைஞரணி தனக்கு மிகவும் பிடித்த தீர்மானம் என தெரிவித்திருந்தார். கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருவது கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனவும், அடுத்த தலைமுறையினர் திமுகவை கட்டியெழுப்ப வந்துவிட்டனர் என்று பொருள்படும்படி முதல்வர் மு.க‌ஸ்டாலின் கூட்டத்தில் பேசினார்.


Selvaraghavan: 'இதெல்லாம் செல்வா பார்த்தா அவ்வளவு தான்’ .. தியேட்டரில் பங்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ




இந்நிலையில் முதல்வரின்  பாராட்டை அடுத்து  இல்லம் தோறும் இளைஞரணி திட்டத்தை திமுகவினர் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று "இல்லம் தோறும் திமுக இளைஞரணி" என்ற திட்டம் அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதியில் மன்னம்பந்தல், மாயூநாதர் கோயில் வடக்கு வீதி ஆகிய இடங்களிலும், பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலிலும் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார்.


AIADMK Meeting LIVE: கூட்டணிக் கட்சியால் விமர்சிக்கப்பட்ட அண்ணா; என்ன முடிவு செய்யப்போகிறது அதிமுக; பரபரப்பில் அரசியல் களம்




மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் மற்றும் மஞ்சள் பை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Aiadmk - Bjp Alliance: பாஜக உடன் கூட்டணி குறித்த கேள்வி; நைசாக நழுவிச் சென்ற ஜெயக்குமார்