7 ஜி பிருந்தாவன் காலனி படம் மீண்டும் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


முன்னணி இயக்குனர் செல்வராகவன்:


துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்  செல்வராகவன். அவரது 2வது படமான காதல் கொண்டேன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. செல்வராகவன் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாற தொடங்கினார். பின்னர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என பல படங்களை இயக்கியுள்ளார்.


இதற்கிடையில் நடிகராக களம் கண்ட செல்வராகவன், பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ள செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுப்பது தொடர்பான பணிகளில் களமிறங்கியுள்ளார். அதேசமயம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தத்துவ மழைகளை பொழிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். 






 


7ஜி ரெயின்போ காலனி ரி ரிலீஸ்:


இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு தமிழில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், விஜயன், மனோரமா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘7 ஜி ரெயின்போ காலனி’ . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் எவர்க்ரீன் ஹிட்டாக இன்றும் உள்ளது. சமீபகாலமாக இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கு பதிப்பான ‘7 ஜி பிருந்தாவன் காலனி’ கடந்த சில நாட்களுக்கு முன் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. 


இதனைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் கூடிய நிலையில், படத்திற்கான வரவேற்பை கண்டு தெலுங்கு திரையுலகினரே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படத்தில் சோனியா அகர்வால் விபத்தில் இறந்து விடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அவரது உடலை குடும்பத்தினர் சுமந்து செல்லும் நிலையில் ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடல் ஒலிக்கும். இந்த காட்சி தியேட்டரில் செல்லும் ரசிகர்கள் சிலர் ரசிகரில் ஒருவரை பிணம் போல தூக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. 


இதனைப் பார்த்த இணையவாசிகள் உங்கள் கிரியேட்டிவிட்டுக்கு அளவே இல்லையா?.. இதெல்லாம் செல்வராகவன் பார்த்தால் படம் எடுப்பதை விட்டுடுவார் என வேடிக்கையாக கமெண்டுகளை பதிவுட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: Siragadikka Aasai: விஜயா வைத்த செக்.. ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் இதோ..!