AIADMK Meeting LIVE: 'நன்றி மீண்டும் வராதீர்கள்' ட்வீட் போட்டு பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன அ.தி.மு.க.
AIADMK Meeting LIVE Updates: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த உடனடி தகவல்களுக்கு ஏபிபி நாடு வலைதளத்தை பின் தொடருங்கள்.
கூட்டணி முறிவு குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என பாஜக மாநிலத் தலைமையின் சார்பாக கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.
AIADMK District Secretaries Meeting LIVE: அதிமுக கூட்டணி குறித்து அண்ணாமலை பேட்டி..!
தேசிய தலைமை பேசும் - அண்ணாமலை
அதிமுக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளதால், இதனால் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு வரவேற்கிறேன். அதிமுகவிற்கு பாஜக தொங்கு சதைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் பாஜகவிற்கு எந்த தொந்தரவும் இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தும் பணி சிறப்பாக உள்ளது என பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என ஹெச். ராஜா கூறியுள்ளார்.
பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
AIADMK District Secretaries Meeting LIVE: பாஜக நோட்டாவின் போட்டியாளர் - கடுமையாக விமர்சிக்கும் அதிமுகவினர்
அதிமுக தனது தலைமையில் தனியாக 2024ஆம் ஆண்டு தேர்தல் களத்தினை எதிர்கொள்ளும் என அறிவித்துள்ளதால், I.N.D.I.A கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி என தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல் மும்முனைத் தேர்தல் நடைபெறும் என்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளதால், பாஜக தனது மாநிலத்தலைமையை மாற்றினால் மீண்டும் இந்த கூட்டணி அமையும் என அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுக இந்த முடிவில் உறுதியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நீதி மன்றத்தில் வெல்லாம், ஆனால் மக்கள் மன்றத்தில் வெல்ல வேண்டும், நம்பியவர்களுக்கு துரோகம் செய்பவர் என மீண்டும் நிரூபித்துவிட்டார் என அமமுகவின் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி இல்லை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 3 முறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இந்த முடிவு என்பது பாஜக தேசிய தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எடுக்கப்பட்ட முடிவு எனவும், இந்த முடிவு என்பது முடிவான முடிவு இல்லை என கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி நிலைபாட்டில் ஜெயலலிதா எப்படி உறுதியாக இருந்தாரோ அதேபோல் இன்றைய அதிமுக தலைமையும் இருக்கவேண்டும் என விசிக எம்.பி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணி நாட்டில் எங்கு பலவீனப்பட்டாலும் அது நாட்டிற்கு நல்லது என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளதை சாதாரணமாகப் பார்க்க முடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சி செய்வேன் எனப் பொருள் படுவதுபோல புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி மீண்டும் வராதீர்கள் என அதிமுக ட்வீட் செய்துள்ளது.
அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியில் வந்துள்ளதால் தமிழ்நாட்டில் பாஜக தனிமை படுத்தப்பட்டுள்ளது என சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி முறிவு என்பது எங்களுக்கு தீபாவளி என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மத்தியில் பாஜவிற்கும் மாநிலத்தில் அதிமுகவிற்கும் ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியிருப்பது அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பெரும் அதிர்வலையை ஏற்பத்தியுள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்வதாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாஜகவுக்கு பின்னடைவு இல்லை என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக ஒருமனதாக தீர்மானம் செய்துள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி இல்லை எனவும் வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுடனான கூட்டணியுடன் சந்திக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முடிந்து மாவட்டச் செயலாளர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.
அதிமுகவிற்கு பாஜக தேவையில்லை என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார் தென்காசி முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன்
ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுக தொண்டகள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என ஒரு மாவட்டச் செயலாளர் கூறியதற்கு பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் கைதட்டி வரவேற்றுள்ளனர்.
பாஜகவுடனான கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டச் செயலாளர்களிடம் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்துவருவதால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுக்கப்படுமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்ததையடுத்து, அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்று புகார் அளித்தும் பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததை அடுத்து அதிமுக் மூத்த தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணி இல்லை என தெரிவித்தனர்.
தென்காசி முன்னாள் எம்.பி வசந்தி முருகேசன் மற்றும் பாஜக எம்.எல்.ஏவும் பாஜக சட்டமன்ற தலைவருமான நயினார் நாகேந்திரனின் அண்ணனுமான நயினார் பெருமாள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையவுள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஏற்கனவே விமர்சனம் செய்ததற்கு இது போன்று மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
இந்த மாவட்டச் செயலாளார்கள் கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து விமர்சித்த நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் கண்டனத்தினை தெரிவித்ததுடன் பாஜகவுடனான கூட்டணி இனி இல்லை என தெரிவித்திருந்த நிலையில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்குகொள்ள அதிமுகவின் 75 மாவட்டச் செயலாளர்களும் தலைமை கழகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
Background
AIADMK District Secretary Meeting LIVE:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) தலைமையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், பாஜக உடனான கூட்டணி, தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி:
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்பான ஆலோசனை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் போன்ற தலைவர்களை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது, அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என கடந்த 18ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால், இருகட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு விமர்சித்துக் கொண்டனர். அதேநேரம், அண்ணாமலை பேசுவது சரியில்லை அவருடன் தான் மோதலே தவிர, பாஜக உடன் கிடையாது என சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
”அண்ணாமலை வேண்டாம்”
இதனிடயே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களை கொதிப்படையச் செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக வேறு தலைவரை நியமிக்காவிட்டால் இரு கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் பணியாற்றுவது சாத்தியமற்றது எனவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என, ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். இதனால், இன்றைய கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
தேர்தல் பணிகள்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தேர்தல் வியூகங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகக் கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -