தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“ திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயலாளர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர்பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.




கழகம் வழங்கிய வாய்ப்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப்பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.


கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக்கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்கு தயாராகி வருகிறேன். இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, “எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.




எனவே பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில்  வந்த நம் கழகத்தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்.”


இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது முதல் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடும்ப அரசியல் என்ற விமர்சனம் தி.மு.க. மீது நீண்ட காலமாக இருந்து வருவதால் உதயநிதிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மூத்த அமைச்சர்கள் உள்பட பல அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பல மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமை கழகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : P. Chidambaram: '10 சீட்டுதானே இருக்கு..' நக்மாவின் அதிருப்தி குறித்து பளீரென பதிலளித்த ப.சிதம்பரம்!


மேலும் படிக்க : பஞ்சாயத்து முதல் ஜனாதிபதி வரை! 230 முறை வேட்புமனுத் தாக்கல்.. தோல்விதான் இலக்கு! பலே பத்மராஜன்!


மேலும் படிக்க : Karunanidhi Statue : உடைக்கப்பட்ட சிலை: உயிருள்ளவரை வேண்டவே வேண்டாமென மறுத்த கருணாநிதி! வரலாறு என்ன தெரியுமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண