செங்கல்பட்டு அருகே திம்மாவரம், வாலாஜாபாத் அருகே அவளூர் ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியது, தமிழ்நாட்டில் திமுக மாநில சுயாட்சி பற்றி பேசுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்காமல் அவர்களுக்கு முழுமையான அதிகாரங்களை அளிக்க வேண்டும்.



தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுகிறோம். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவின் பலம் வெளிப்படும். தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். நீண்ட உழைப்புக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகியுள்ளார். நாமும் நீண்ட காலமாக உழைத்து வருகிறோம். அடுத்து ஆட்சிக்கு வரப்போவது பாமகதான். நீட் தேர்வு மத்திய அரசு பட்டியலில் உள்ளது. மாநில அரசு பட்டியலில் இருந்தால் நாமே சட்டமசோதா மூலம் நீக்கி இருக்க முடியும். 

 

மத்திய அரசு பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதுபோல் ஒரு தீர்மானம் நீட் தேர்வை ரத்து செய்ய நிறைவேற்றப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து கிராமங்கள் தோறும் தொண்டர்களை சந்திக்க வர உள்ளோம். கட்சியை பல்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியின் அடிப்படையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வருகிறோம். கட்சி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தனித்து போட்டியிடுகிறோம். கடந்த முறையே பாமகவுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்க்க அளவு இடங்கள் கொடுக்கப்படவில்லை. வருகின்ற நகர உள்ளாட்சித் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார்.



தமிழகத்தில் திமுக, அதிமுகவால் இனிமேல் தனித்து போட்டியிட்டு ஆட்சிக்கு வர முடியாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கியதற்கு காரணம் திமுக, அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்கு அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கே. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என்றார்.

 

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஆதரவு குறித்து கேட்டதற்கு, அந்த விவகாரம் தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி  , வடக்கு மண்டல பொறுப்பாளர் ஏகே மூர்த்தி,  பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள்  திருக்கச்சூர் ஆறுமுகம் , பொன் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...


Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?


TN Local Body Election: விழுப்புரம்... உயர்வது யார் கரம்...? பொன்முடி Vs சிவி சண்முகம்... உள்ளாட்சி கிங் யார்?


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!


அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!