சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் பார்ப்பது விழுப்புரம் மாவட்டம். 

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:

ஊராட்சி ஒன்றியங்கள்  
செஞ்சி காணை
கண்டமங்கலம் கோலியனூர்
முகையூர் மயிலம்
ஒலக்கூர் மரக்காணம்
திருவெண்ணெய்நெல்லூர் மேல்மலையனூர்

வானூர்

வல்லம்

விக்கிரவாண்டி

 

 

தொகுதி ஆண் வாக்காளர் பெண் வாக்காளர் இதர வாக்காளர்
செஞ்சி 1,28,545 1,31,577 37
மயிலம் 1,09,755 1,10,088 25
திண்டிவனம்(தனி) 1,13,322 1,16,577 13
வானூர்(தனி) 1,10,930 1,14,767 16
விழுப்புரம் 1,27,445 1,33,463 62
விக்கிரவாண்டி 1,15,608 1,18,268 25
திருக்கோவிலூர் 1,27,601 1,26,342 38

 

மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்: 

மாவட்டம் மொத்தம் ஆண்கள் பெண்கள் இதர
விழுப்புரம் 1383687 6,87,420 6,96,115 152

 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:

முதல் கட்ட தேர்தல்
செஞ்சி
கண்டமங்கலம்
முகையூர்
ஒலக்கூர்
திருவெண்ணெய்நெல்லூர்

வானூர்

விக்கிரவாண்டி

 

இரண்டாம் கட்ட தேர்தல்
காணை
கோலியனூர்
மயிலம்
மரக்காணம்
மேல்மலையனூர்

வல்லம்

யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிவாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம். மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுகவும், 3 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியிருக்கிறது. இதோ தொகுதி வாரியான வெற்றி விகிதம்...

1.செஞ்சி

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே.எஸ்.மஸ்தான் திமுக 1,09,625
எம்.பி.எஸ்.ராஜேந்திரன் பாமக(அதிமுக) 73,822
ஸ்ரீபதி மக்கள் நீதி மய்யம் 2,151
சுகுமார் நாம் தமிழர் 9,920
கவுதம் அமமுக

4,811

 

செஞ்சி தொகுதியில் திமுக கூட்டணி வாக்கு அறுவடை செய்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவை 35,803 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இது பிற கட்சிகள் பெற்ற வாக்குகளை விட பல மடங்கு அதிகம். அதிகபட்சமாக நாம் தமிழர் 10 வாக்குகளை நெருங்கியிருக்கிறது. அமமுக 5 ஆயிரம் ஓட்டுகளை நெருங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே மிகக்குறைந்த வாக்குகளே பெற்றது. செஞ்சியும் அதற்க விதிவிலக்கு அல்ல. திமுகவிற்க சாதகமான தொகுதி. 



கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 52.99%
அதிமுக 35.68%
மக்கள் நீதி மய்யம் 1.04%
அமமுக 2.33%
நாம் தமிழர் 4.80%

 

2.மயிலம்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சிவக்குமார் பாமக(அதிமுக) 81,044
மாசிலாமணி திமுக 78,814
ஸ்ரீதர் ஐஜேகே(மநீம) 344
உமா மகேஸ்வரி நாம் தமிழர் 8,340
சுந்தரேசன் தேமுதிக(அமமுக)

3,921

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு விதமான வாக்குகள் பதிவாயின. அந்த வகையில் மயிலம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை பாமக வீழ்த்தியது. அதிமுக போட்டியிட்டிருந்தால் அதன் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகரித்திருக்கும் என்கிறார்கள். ஆனால் வெற்றி வித்தியாசத்தையும், பிற கட்சிகளின் வாக்குகளையும் ஒப்பிடும் போது நாம் தமிழர் மற்றம் தேமுதிக வாங்கிய வாக்குகள் அதிகம். மநீம கூட்டணியில் ஐஜேகே படுதோல்வியை சந்தித்தது. இந்த முறை பாமக தனித்து நிற்கிறது. அதிமுக நேரடியாக மோதும். முடிவு எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 44.53%
அதிமுக 45.79%
மக்கள் நீதி மய்யம் 0.19%
அமமுக 2.22%
நாம் தமிழர் 4.71%

 

3.திண்டிவனம்(தனி)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அர்ஜூனன் அதிமுக 87,152
சீதாபதி சொக்கலிங்கம் திமுக 77,399
அன்பின் பொய்யாமொழி மநீம 2,079
பேச்சிமுத்து நாம் தமிழர் 9,203
சந்திரலேகா தேமுதிக(அமமுக)

2,701

திண்டிவனத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 9,753 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியிருக்கிறது. அதிகவின் வெற்றி வித்தியாசத்திற்கு குறைவான வாக்குகளையே பிற கட்சிகள் பெற்றன. இருந்தாலும் நாம் தமிழர் வாக்குகள் அதை நெருங்கி வருகிறது. 3 ஆயிரம் வாக்குகளை கடக்க தேமுதிக-மநீம இடையே கடும் போட்டி நடந்தது. ஆனால் இருவரும் அதில் தோல்வியடைந்துள்ளனர். அதிமுகவிற்கு சாதகமான தொகுதியாக தான் திண்டிவனம் உள்ளது. 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 42.40%
அதிமுக 47.74%
மக்கள் நீதி மய்யம் 1.14%
அமமுக 1.48%
நாம் தமிழர் 5.04%

 

4.வானூர்(தனி)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சக்கரபாணி அதிமுக 92,219
வன்னியரசு விசிக(திமுக) 70,492
சந்தோஷ்குமார் மக்கள் நீதி மய்யம் 2,500
லட்சுமி நாம் தமிழர் 8,587
கணபதி தேமுதிக(அமமுக)

5,460

தனித் தொகுதிகளை அதிமுக தட்டித் தூக்கியிருக்கிறது. அந்த வகையில் வானூர் தொகுதியை அதிமுக 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் தன் வசமாக்கியது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிகவின் வன்னியரசு படுதோல்வி அடைந்தார். அதிமுகவின் வெற்றி வித்தியாசம் நாம்  தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக பெற்ற வாக்குகளை விட அதிகம். நல்ல பலத்தில் அதிமுக இங்கு உள்ளது. 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 38.69%
அதிமுக 50.61%
மக்கள் நீதி மய்யம் 1.37%
அமமுக 3.00%
நாம் தமிழர் 4.71%

 

5.விழுப்புரம்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
லட்சுமணன் திமுக 102,271
சி.வி.சண்முகம் அதிமுக 87,403
கே.தாஸ் டிஎம்ஜேகே(மநீம) 3,242
செல்வம் நாம் தமிழர் 6,375
பாலசுந்தரம் அமமுக

1,695

மாவட்ட தலைநகரில், அமைச்சர் வேட்பாளர் சிவி சண்முகத்தின் படுதோல்வி அதிமுகவிற்கு பெரிய பின்னடைவு. 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் தோல்வி, அதே நேரத்தில் திமுகவின் அபார வெற்றி, விழப்புரம் மாவட்டத்தில் திமுகவின் வலிமையை காட்டுகிறது. நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக இங்கு பெரிய வாக்குகளை பெறவில்லை. அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கவும் இல்லை. முழுக்க திமுக மற்றும் அதன் க;ட்டணி பலத்தையே இங்கு பதிவான வாக்குகள் காட்டுகிறது. 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 49.92%
அதிமுக 42.66%
மக்கள் நீதி மய்யம் 1.58%
அமமுக 0.83%
நாம் தமிழர் 3.11%

 

 

6.விக்கிரவாண்டி

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
புகழேந்தி திமுக 93,730
முத்தமிழ் செல்வன் அதிமுக 84,157
ஆர்.செந்தில் ஐஜேகே(மநீம) 207
ஷீபா ஆஸ்மி நாம் தமிழர் 8,216
அய்யனார் அமமுக

3,053

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற விக்கிரவாண்டி தொகுதியை சில மாதங்களில் அதிமுக இழந்திருக்கிறது. 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு நாம் தமிழர் வெற்றி வித்தியாசத்திற்கு தேவையான வாக்குகளை நெருங்குகிறது. அமமக வழக்கமான அதே மூவாயிரம் ப்ளஸ் வாக்குகளை மட்டுமே பெற்றது. மநீம கூட்டணியில் ஐஜேகே படுமோசமான வாக்குகளை பெற்றது. இங்கு திமுக நல்ல பலத்தில் கெத்தான நிற்கிறது. 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 48.41%
அதிமுக 43.47%
மக்கள் நீதி மய்யம் 0.11%
அமமுக 1.58%
நாம் தமிழர் 4.24%

 

 

7.திருக்கோவிலூர்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பொன்முடி திமுக 110,980
கலிவரதன் பாஜக(அதிமுக) 51,300
செந்தில்குமார் ஐஜேகே(மநீம) 1,066
முருகன் நாம் தமிழர் 11,620
வெங்கடேசன் தேமுதிக(அமமுக)

13,997

திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான பொன்முடி, 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது அவரது வெற்றியை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுகவோ அல்லது பாமகவோ போட்டியிருந்தால், வாக்கு வித்தியாசம் மட்டுமே குறைந்திருக்கும் என்றும், திமுக தான் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாஜகவிற்கு எதிரான அதிமுகவின் ஓட்டுகள் அமமுகவை சேர்ந்திருப்பதை பார்த்திருக்கிறது. அமமுக அதிகபட்சம் பெற்ற வாக்குகளில் இந்த தொகுதியும் ஒன்று. 10 ஆயிரம் ப்ளஸ் வாக்குகளை அமமுக கூட்டணியில் தேமுதிக பெற்றிருக்கிறது. இருந்தாலும் அதுவும் வெற்றி வித்தியாசத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அதிக வாக்குகள் பெற்ற மூன்றாவது கட்சி என்கிற பெயர் மட்டும் இந்த தொகுதியில் அமமுக கூட்டணிக்கு கிடைத்துள்ளது. 



கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 56.56%
அதிமுக 26.14%
மக்கள் நீதி மய்யம் 0.54%
அமமுக 7.13%
நாம் தமிழர் 4.24%

 

 

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகளின் பலம்... பலவீனம் என்ன...?

கட்சி பலம் பலவீனம்
திமுக

கூட்டணி தொடர்கிறது

ஏற்கனவே பெற்ற வெற்றி

ஆளுங்கட்சி என்கிற சாதகம்

குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர்

பண பலம்

அதிமுக வசமுள்ள தொகுதிகள்

அதிமுக வாக்கு சதவீதம்

கூட்டணி பங்கீடு

விஜய் மக்கள் இயக்கம்

அதிமுக

கடந்த கால வாக்கு விகிதம்

கைவசம் 3 தொகுதியில் வெற்றி

பண பலம்

பாமக கூட்டணி வெளியேற்றம்

சிவி சண்முகம் தோல்வி

எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு

விஜய் மக்கம் இயக்கம்

நாம் தமிழர்

சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள்

சீரான வாக்கு விகிதம்

கூட்டணி இல்லாதது

உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள்

பண பலம்

மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை

மக்கள் நீதி மய்யம்

கமல் என்கிற அடையாளம்

கூட்டணிக்கு தாரைவார்த்தது

மிகக்குறைவான வாக்கு விகிதம்

கட்சியில் ஏற்பட்ட பிளவு

மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை

பண பலம்