விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முறுக்கேரி - சிறுவாடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அங்கு பிரச்சாரம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் கூறியதாவது :


மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் நேரடியாகக் கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்து நான்கைந்து மாதங்கள் தான் ஆகிறது. இதனை ஹனிமூன் பீரியட் என்று சொல்லுவார்கள். புது மாப்பிள்ளைக்கு ஆறு மாதத்திற்கு மரியாதை என்பது கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். அதே போல்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை புது மாப்பிள்ளையாக ஐந்தாவது மாதத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் கூட இந்த ஐந்து மாதத்திற்குள்ளாகவே உள்ளாட்சித் தேர்தல் வந்துள்ளது. எல்லா நேரத்திலும் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்கு செலுத்தலாம் என நினைப்பார்கள், ஆனால் இது அதுபோன்ற தேர்தல் கிடையாது.




உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை 80% உங்களுக்கு வரக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நலத்திட்டங்கள் தான் உங்களுக்கு உள்ளாட்சி மூலமாக வருகிறது. 1980, 1990 வேற காலம், மாநில அரசு நிதியை கொடுத்து உள்ளாட்சிகள் பணம் அனுப்பப்பட்டு பஞ்சாயத்தின் மூலம் செலவு செய்வார்கள். 2021 நரேந்திர மோடியின் காலம், அனைத்து அரசு திட்டங்களும் பஞ்சாயத்து மூலமாக மக்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. மாநில அரசினுடைய பங்கு என்பது 20 சதவீதம் மட்டும்தான் மத்திய அரசு 80% உள்ளாட்சியில் வரக்கூடிய நிதி மத்திய அரசு கொடுக்கின்ற நிதியாக உள்ளது. மேலும் அடுத்த இரண்டு வருடத்தில்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு கனவு இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலில் மக்கள் குடிக்கின்ற குடிநீர் என்பது பைப் மூலமாக வரவேண்டும் என்பதுதான். இந்தத் திட்டம் மோடியின் கனவு திட்டம் இந்த திட்டத்தின் பெயர் ஜல் ஜீவன் திட்டம். ஜல் ஜீவன் திட்டம் என்பது ஏழை மக்கள் வீட்டின் வாசலில் வைத்து அவர்கள் தண்ணீரை பிடித்துக்கொள்ள வேண்டும். யாரும் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்க தூரமாக செல்ல கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கம் . இந்தத் திட்டம் முழுமையாக 100% உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.




திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் திமுகவைப் பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்கின்ற குடிநீர் திட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால் மட்டுமே குடிநீர் பைப் வரும். ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாக உங்கள் வீட்டிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றால் 500 ,ஆயிரம், பத்தாயிரம் கொடுங்க என வசூல் செய்கிறார்கள். 100% இந்த திட்டத்திற்கு பணம் கொடுப்பது மத்திய அரசு.  கடந்த வருடம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தாமரை இருக்கும். மத்திய அரசு முழுமையாக நேரடியாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் லஞ்ச லாவண்யம் இல்லாமல் வரவேண்டுமென்றால் தாமரை சின்னத்தில் ஓட்டு போட வேண்டியது காலத்தின் கட்டாயம்.


எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, நூறுநாள் வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு 274 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளம், இலவசமாக வங்கி கணக்கு, எல்பிஜி அடுப்பு இதுபோன்ற கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்கள் தான் மோடியின் திட்டத்தை அதிகளவில் பயன் அடைந்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனை என்னவென்றால் பத்து மாதகாலம் சுமந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றெடுத்த குழந்தைக்கு பெயர் வைக்க போட்டி போட்டு நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். நாங்கள் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தோம் என்று காண்பிக்கின்றனர்.


 




அவர்களின் கபட நாடகத்தை தாண்டி நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். நான்கு மாத காலமாக திராவிட கழகத்தின் ஆட்சியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அவர்கள் செய்திருக்கக் கூடிய சாதனை என்னவென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரண்டரை லட்சம் ரூபாய் சைக்கிளில் செல்வது தான். நீங்களும் நானும் செல்லக்கூடிய சாதாரண சைக்கிள் அல்ல அந்த சைக்கிளின் விலை இரண்டரை லட்சம், அந்த சைக்கிளில் அவர் ஒரு கிலோ மீட்டர் செல்வதற்கு 2000 போலீஸ் பாதுகாப்பு, சைக்கிளுக்கு முன்பாக 20 காரும் சைக்கிளுக்கு பின்பாக இருபது காரும் செல்கின்றன.


 




இதுபோன்ற சைக்கிள் செல்வதினால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். சைக்கிளில் செல்லும் அக்கறையை அவரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் என்றால் மக்கள் அவரை விரும்புவார்கள்.பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாத மாதம் கொடுக்கப்படும் என்று கூறியது யாருக்கும் வரவில்லை, இலவசமாக சிலிண்டர் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார் எதையும் வழங்கவில்லை. திராவிடக் கழகத்தின் அரசு பொருத்தவரை இது ஒரு புளுகு மூட்டை யாகவும் பொய்கள் அதிகமாக பேசும் அரசாக இருக்கிறது என பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.