ADMK Case Live : அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் விவரத்தை உடனுக்குடன் கீழே காணலாம்.
அதிமுக பொதுக்குழு குறித்த ஐகோர்ட் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் : ஓபிஎஸ்
அ.தி.மு.க. பொதுக்குழு மூன்று மாதங்களில் கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவிற்கு எதிரான தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவிற்கு எதிரான தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவு
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர்மோகன், துரைசாமி அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்கின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வாதித்தனர்
Background
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நேற்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ஜூலை 1 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகுந்த அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்ற தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என்றும் தெரிவித்தனர்.
அதிமுகவினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், கட்சி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் வாதம் முன்வைத்தனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது விபரீதமானது எனவும் தெரிவித்தனர். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -