மொஹரம் பண்டிகை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவில்  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு தப்ரூக் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

மொஹரம் பண்டிகை இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை முஸ்லீம்கள் துக்க நாளாக மொஹரம் பண்டிகையை கடைப்பிடிக்கின்றனர். மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் இஸ்லாமியர்கள் சிறப்பு பாத்தியா ஓதப்பட்டு இஸ்லாமியர்களுக்கு தப்ரூக் பிரசாதம் வழங்கப்பட்டது.



 

அப்போது அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடியும், அவரின் தியாகத்தை போற்றியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி தர்கா நிர்வாகம் சார்பில் துவா செய்தும் அதனைத் தொடர்ந்து தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் மரிசியா நிகழ்ச்சி தர்காவில் கிழக்கு வாசலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நாகூர் கடற்கரை வரை சென்றடைந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட  பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பாத்தியா ஓதி வழிபட்டனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண