Vijayakanth Traffic: விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை தீவுத்திடலை சுற்றி, போக்குவரத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்:


உடல்நிலை காரணமாக உயிரிழந்த விஜயகாந்தின் உடல்,  நேற்று காலை முதல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், அது நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஊர்வலாமாக கொண்டு வரப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.


போக்குவரத்தில் மாற்றம்:


இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்கள் அதிகளவில் கூடுவதோடு, மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமனும் இன்று தீவுத் திடல் பகுதிக்கு வருகை தர உள்ளார். இதனால், கூட்ட நெரிசல் மற்றும் அசம்ப்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் தீவுத்திடல் பகுதியில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனை தெரிந்து கொண்டு பயணித்தால் பொதுமக்கள் சிரமங்களை தவிர்க்கலாம்.



  • காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவகம் மற்றும் தீவு திடலின் இடது வாசல் வழியாக அண்ணாசாலைக்கு நுழையும் கொடி ஊழியர்கள் சாலையிலும் அனைத்து விஐபி மற்றும் விவிஐபி-க்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

  • மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணா சாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.
     

  • தீவுத் திடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்தின் அளவு ஓரளவிற்கு அதிகமானதாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சிகேப்கள்) அண்ணா சிலை அருகே அனுமதிக்கப்படும், மேலும் கட்சி தொண்டர்களுக்கான அனுமதி முடிந்தவுடன் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.

  • அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்

  •  தீவுத் திடல், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியிலிருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலையில் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை


மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இன்றைய பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.