தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே உள்ள கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்து தமிழக வெற்றி கழகத்தினர் வேஷ்டி, புடவை மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

இரண்டாம் ஆண்டில் தவெக

தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவை அடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நேற்று கொடியேற்றி, அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அடுத்த கட்ட நகர்வுகள் 

கடந்த 2024 -ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக நடிகர் விஜய் அறிவித்தார். மேலும் அப்போது 2026 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என நிர்ணயித்து, அதற்கான அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒன்றாக, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணைப் பொதுச்செயலாளர், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் நியமித்தார்.

Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...

பிரியாணி விருந்து 

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியினரால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட தவெகவினரும் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன் பேட்டை கிராமத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்கள் 400 பேருக்கு கட்சியின் சார்பில் மதிய விருந்தாக பிரியாணி சிக்கன் பரிமாறப்பட்டது. 

"ஸ்லீவ்லெஸ் கூட போட மாட்டாங்களாம்...சாய் பல்லவியை புகழ்ந்த அர்ஜூன் ரெட்டி இயக்குநர்

கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி பொது மக்களுக்கு விருந்து பரிமாறினார். தொடர்ந்து அந்த கிராம மக்கள் 150 பேருக்கு வேட்டி, சோலைகளும், 100 மாணவர்களுக்கு நோட்புக், பேனா போன்ற கல்வி உபகரணங்களையும் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர பொறுப்பாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

Simbu: "கம்பேக்னா இதாண்டா கம்பேக்.. நாம கத்துக்கனும்" மீண்டும் டாப் கியரில் பறக்கும் சிம்பு!

கலந்துகொண்ட நிர்வாகிகள் 

இந்நிகழ்வில் மயிலாடுதுறை நகர பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவரசன், துணைச் செயலாளர், மாவட்ட செயற்குழு அபிராமி ராஜ், ரம்யா, கல்யாணி ரம்யா, ஜாஸ்மின், நடராஜ், k.k.ஜியாதின் மாணவரணி சதீஷ் மயிலாடுதுறை நகரம் பிரபஞ்சன், ஆசிப் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகர், (ம)தெற்கு ஒன்றிய பாண்டி, மேலும் செம்பை ஒன்றியம் பொறுப்பாளர் நடராஜன், நகர நிர்வாகிகள் விஷால், ஆகாஷ், மோஹித், தமிழ், சிக்கந்தர், தெற்கு ஒன்றியம் சரண், வடக்கு ஒன்றியம் சதீஷ், சுதாகர் மணிகண்டன் மற்றும் மயிலாடுதுறை ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.