மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1989 - 1990 ஆண்டில் திருநெல்வேலியில் காவலர் பயிற்சி பெற்று தற்போது காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒரே இடத்தில் மீண்டும் சங்கமித்த நிகழ்வு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களும் வீடியோ காலில் இணைந்து நினைவலைகளை பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பழைய நண்பர்கள் சந்திப்பு
பள்ளி கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது தொடர்ந்து நடைபெறும் ஒன்று. இவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்று கூடி தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வர். மேலும் அவர்கள் பயின்ற பள்ளி கல்லூரிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்வர். இது வழக்கத்தில் உள்ள ஒன்று என்றாலும், அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. அதேபோன்ற சந்திப்பு ஒன்று மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது. ஆனால் இது முன்னாள் மாணவர்கள் அல்ல, யார் இவர்கள் முழுமையாக பார்ப்போம்.
1989 - 1990 -ம் ஆண்டில் பயிற்சி பெற்ற காவலர்கள்
1989 - 1990 ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பலர் தேர்வாகினர். அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறில் காவலர் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஒன்றாக காவலர் பயிற்சி பெற்றவர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்எஸ்ஐ உட்பட பல பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் பறவைகள் ஏன் கீழே விழுவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்..!
மயிலாடுதுறையில் சந்தித்த நண்பர்கள்
இவர் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றினைந்து சந்திக்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சியில் இவர்களின் முதல் சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அனைவரும் ஒரே இடத்தில் சங்கமித்த இரண்டாம் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கத்துக்கு எதிராக கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
அனுபவங்கள் பகிர்வு
பின்னர் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை சக காவலர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் சில காவலர்கள் பங்கேற்க முடியாத நிலையில் வீடியோ கால் மூலம் இணைந்து தங்களது நண்பர்கள் அனைவரையும் பார்த்து புன்னகை முகத்துடன் நினைவுகளை பரிமாறியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. இறுதியாக அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மன அழுத்தத்தை குறைத்து சந்திப்பு
மேலும் காவல் பணி மிகுந்த மன அழுத்தம் கொண்ட பணி எனவும், இதுபோன்ற சந்திப்பு, அதுவும் குடும்பத்தினருடன் இணைந்து பழைய நண்பர்களை பார்த்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவது தங்களின் மன அழுத்தத்தை குறைத்து மன நிறைவை தருகிறது என இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவலர்கள் தெரிவித்தனர்.