மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் துடித்த வடமாநில கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர் அரசு மருத்துவனை சிகிச்சை குறித்து போனில் புகார் தெரிவித்த உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து உயர்தர சிகிச்சை சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வயிற்று வலியால் வடமாநில பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருபவர் சுமேர் சிங் மீனா. வட மாநில தொழிலாளரான சுமேர் சிங் மீனாவின் மனைவி மூன்று மாத கர்ப்பிணியான மனிஷா மீனாவிற்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரது கணவர் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
ஆட்சியரிடம் புகார்
அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நலத்தில் எவ்விதமான முன்னேற்றம் இல்லாத நிலையில் கர்ப்பிணி பெண்மணி மனிஷா மீனா அதிக வலியால் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளார் . இதனை அறிந்த அவரின் மைத்துனர் ராம் கிருபால் உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு தொலைபேசி மூலம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு விரைந்து வந்த ஆட்சியர்
உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரடியாக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்மணி மனிஷா மீனா நேரில் சந்தித்தார். அதுமட்டு இன்றி அங்கிருந்த மருத்துவர்களை அழைத்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தகுந்த முறையில் உயர்மட்ட சிகிச்சையினை அந்த கர்ப்பிணி பெண்மணியான மனிஷா மீனா வழங்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார். தொலைபேசி புகார் அளித்த உடனே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து நடவடிக்கை மேற்கொண்ட இந்த செயல் பலதரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
Navratri 2024: நவராத்திரி கொண்டாட்டம்! அம்மனுக்கு 9 நாளும் 9 பெயர், 9 நிறம் - முழு விவரம்
மேலும் தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்ற மகாபாரதி தான் பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருவதும், மாவட்ட வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மறுகணமே மருத்துவர் ஓய்வெடுக்க செல்லியதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணிக்கு திரும்பியவர் ஆட்சியர் மகாபாரதி அதன் காரணமாக மாவட்ட மக்களிடையே மிகுந்த நன்மதிப்பை பெற்றவர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அவர் பூரண குணமடைய வேண்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.