மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டான அருகே சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் சுதேஷ் தலைமை தாங்கிய விழாவில், அறிவியல் சம்பந்தமான கண்காட்சி மற்றும் ஆய்வுகள் குறித்து விஞ்ஞானிகள் எடுத்துக் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானி சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினார்.
மேலும் இதில் முதல்நாள் நிகழ்வாக செயற்கைக்கோள்களை எவ்வாறு ட்ராக்கிங் செய்து அதன் சமிக்ஞைகளை பெறுவது மற்றும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்து கூறி, பள்ளி மைதானத்தில் நின்றவாறே அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றினை நேரடியாக ட்ராக்கிங் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். செயற்கைக்கோள்களின் தொலைத் தொடர்பு நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார். இதற்கான உபகரணங்கள் மற்றும் கருவிகளை எளிதாக பெற்று குழந்தைகளே வடிவமைத்து பயன்படுத்த பயிற்சி அளித்தார்.
TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
பயிற்சி பட்டறையின் ஒரு நிகழ்வாக மடிக்கக்கூடிய நுண்ணோக்கியை உருவாக்கும் ஒரு பட்டறையை பெங்களூரு ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் அறிவியல் ஆராய்ச்சி உதவியாளர் ஆழி முகிலன் செய்முறை விளக்கம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். விழாவின் இறுதி நாளில் சூரியனை கோள்கள் சுற்றிவரும் அமைப்பு, அதேபோல் நிலவு சுற்றுவதால் அமாவாசையில் இருந்து பௌர்ணமி மீண்டும் அமாவாசை வருகிற எட்டு கால் வட்ட மாற்றங்களை விளக்கும் காட்சி, மேலும் செயற்கை கோள் எவ்வாறு பூமியில் இருந்து ஏவப்படுகிறது. ஏவ்வாறு தரையிரங்கி ஆய்வுகள் மேற்கொள்கிறது. என பயிற்சி பட்டறையை காண வந்த சபாநாயகர் முதலியார் பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதை 50 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். இதேபோல் விவசாயம் குறித்து மாணவர்களுக்கு இயற்கை விவாசாயிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விவசாயம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு இப்பள்ளி மாணவர்கள் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை காணும் தொலைநோக்கியை வடிவமைத்து அதன் மூலம் பொதுமக்கள் சூரியனை காண வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது.