மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் 69 வயது முதியவர் ஒருவர் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய ஒரு சக்கர சைக்கிளை தானே தயாரித்து அதனை ஓட்டி வருவது பலரது பாராட்டையும் பெற்று பெற்று வருகிறது.


சாதனை முதியவர் ஸ்ரீதரன்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி இருக்கும் கர்நாடக மாநிலம் கேஜிஎஃப்  (கோலார் தங்க வயல்) பகுதியை  சேர்ந்த 69 வயது முதியவர் ஸ்ரீதரன் கிருஸ்தவராக மதம் மாறி, தனது 20 வயதில் இருந்து ஊழியக்காரர் பொதுசேவை செய்து வருகிறார். முன்னதாக இவர் தருமபுரியில் தங்கி சேவை செய்தவர், தற்போது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள (மனித நேய அரவணைப்பு இல்லம்) காப்பகம் ஒன்றில் தங்கி, அங்கு ஆதரவற்று உள்ள முதியவர்களுக்கு பொது சேவை செய்து வருகிறார்.


ISS: சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலுக்குள் தள்ளிவிட திட்டம்: களமிறங்கும் எலான் மஸ்க்




ஒரு சக்கர சைக்கிளிங்


சைக்கிளில் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட முதியவர் ஶ்ரீதரன், தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக பாரம்பரிய ஒரு சக்கர சைக்கிளிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.  அதனை அடுத்து ஒரு சக்கர சைக்கிளை தானே வடிவமைத்தார். தொடர்ந்து அதனை ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு ஊன்றுகோள் உதவியுடன் சைக்கிளில் அமர்ந்து ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி பழகி வருகிறார். தற்போது படிப்படியாக சைக்கிளை ஊன்றுகோல் இல்லாமல் ஓட்டும் நிலையில், தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வருவதாகவும் அதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்து தன்னை  பாராட்டுவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


Vidyut Jammwal: பட தோல்விகளால் கோடிகளில் நஷ்டம்.. சர்க்கஸ் குழுவில் இணைந்த துப்பாக்கி பட வில்லன்!




முதியவரின் சொந்த முயற்சி 


இதனால் வயது மூப்பிலும் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கையால் கீழே விழுந்து அடிபட்டாலும்,  தொடர்ந்து முயற்சித்ததால் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிகிறது என்றும், சிறிது நாட்களில் ஒரு சக்கர சைக்கிளில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுசேவை செய்வேன் என்று தெரிவித்தார். வெளிநாடுகளில் தான் ஒருசக்கர சைக்கிள் கிடைப்பதால் தானே சொந்தமாக சைக்கிளை வடிவமைத்து விடாமுயற்சியுடன் சைக்கிளை ஓட்ட கற்றுக்கொண்டு வயதானாலும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும், ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு 2.10 லட்சம் ரூபாயில் புதிய வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர் - குவியும் பாராட்டுக்கள்




மேலும், ஒரு சக்கர சைக்கிளை தயாரிக்க தேவையான பொருட்களை பழைய இரும்பு கடைகளில் இருந்து சேகரித்து வந்து 6 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சைக்கிளை தயாரித்துள்ளார். தினமும் தரங்கம்பாடியில் இருந்து பொறையார் வரை சாலையில் ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார். அதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.


Kalki 2898AD Box Office: 2 நாளில் போட்ட பணத்தில் பாதியை திருப்பி எடுத்த கல்கி... வசூல் நிலவரம் பகிர்ந்த படக்குழு!