ISS: சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலுக்குள் தள்ளிவிட திட்டம்: களமிறங்கும் எலான் மஸ்க்

International Space Station: சர்வதேச விண்வெளி நிலையத்தை பசுபிக் பெருங்கடலில் விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஆயுட்காலம் நிறைவடையவுள்ளதாக, விண்வெளியில் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தை பசுபிக் பெருங்கடலில் விழ வைக்க நாசா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

சர்வதேச விண்வெளி நிலையம்:

பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது,  பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும். சில நேரங்களில், சிறு புள்ளி வெளிச்சம் போல் வானத்தில் செல்வதை, பூமியிலிருந்து பலர் பார்த்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு , இந்த விண்வெளி நிலையமானது சென்னையில் தெரிந்ததாகவும் செய்திகள் வந்ததை பார்க்க முடிந்தது.


image credits: @NASA

விண்வெளியில் , சர்வதேச விண்வெளி நிலையத்தின் பணிகளானது 1998 ஆம் ஆண்டு தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு முதல், விண்வெளி வீரர்கள் இயக்க தொடங்கியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இத்திட்ட பணியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை பங்கு வைக்கின்றன. இதன் எடையானது, சுமார் 4.3 லட்சம் கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

எலான் மஸ்க் - ஸ்பேஸ் எக்ஸ்:

இந்நிலையில், தற்போது சிறப்பாக , எவ்வித குறைபாடுமின்றி,  பூமியைச் சர்வதேச விண்வெளி நிலையாமானது சுற்றி வருகிறது. எதிர்காலத்தில், சில ஆண்டுகளில் ஆயுட்காலம் நிறைவடையும் என்பதால், இதை செயலிழக்க வைத்து , உலகின் மிக ஆழமான கடலான பசுபிக் பெருங்கடலில் விழ வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதற்கான பொறுப்பை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 10 ஆண்டுகளில் ஒரு விண்கலத்தை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 843 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


image credits: @NASA

”சேதத்தை தவிர்க்கலாம்”:

இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், சர்வதேச விண்வெளி நிலையமானது, நல்ல நிலையில் இருந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பான நடவடிக்கை எடுப்பது நல்ல செயல்முறைதான். ஏனென்றால், திடீரென பூமியின் மேல் விழுந்தால் , மனிதர்கள் மீது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola