Kalki 2898AD Box Office: 2 நாளில் போட்ட பணத்தில் பாதியை திருப்பி எடுத்த கல்கி... வசூல் நிலவரம் பகிர்ந்த படக்குழு!
Kalki 2898 AD Box Office Collection: பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது வைஜயந்தி மூவிஸ்

கல்கி 2898 ஏடி
பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் (Kalki 2898 AD) கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன், பசுபதி, ஷோபனா, அனா பென், துல்கர் சல்மான், திஷா பதானி, மிருணால் தாக்கூர் , ராஜமெளலி , விஜய் தேவரகொண்டா , ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கல்கி இரண்டாவது நாள் வசூல்
கல்கி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.191 கோடிகள் வசூல் எடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு நாள்களில் படம் உலகளவில் ரூ.298 கோடிகள் வசூலித்துள்ளது.
மொத்தம் ரூ.600 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இரண்டே நாள்களில் போட்ட பணத்தில் பாதியை திரும்ப வசூலித்துள்ளது டோலிவுட் வட்டாரத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.