தருமபுரத்தில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள்  பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். 


தமிழகத்தில் அடுத்த மார்ச் மாதம் முதல் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என தீவிரமாக அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.  


Karnataka Marriage: காதலர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆன்லைனிலேயே திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் - ஆனா ஒரு கண்டிசன்!




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோர் ஆசீர்வாதங்களை பெறும் வகையில் ஆசிர்வாத திருநாள் விழா நடைபெற்றது. இந்த ஆசிர்வாத திருநாளை தொடர்ந்து 200 -க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். 


Steamed Poha Vada: மாலை நேர ஸ்நாக்ஸ் என்ன செய்யலாம்? அவல் வடை அசத்தலா செய்யுங்க!




அதனை அடுத்து தங்களுக்கு பாடம் கற்பிக்கும் குருவான வரிசையாக நின்ற அனைத்து ஆசிரியர்களின் கால்களில் விழ ஆசிரியர்கள் அனைவரும் மாணவ மாணவிகளுக்கு மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் திருக்கடையூர் ஆலய குருக்கள் மகேஷ் சிறப்பு பூஜைகளை செய்து வைத்த நிலையில், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொடுத்து அருள் ஆசி வழங்கினார். அப்போது பள்ளி மாணவர்களின் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்தமிட்டு ஆசிர்வாதம் வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Cinema Headlines: சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அமரன்: ஜெயம் ரவியின் சைரன் பட விமர்சனம்: சினிமா செய்திகள் இன்று!