மயிலாடுதுறையில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது பல்வேறு தொழில்கள் சார்பில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் உள்ளிட்டோர் இணைந்து சாலை மறியல் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துனர்.


Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு...எந்த தேதி வரை தெரியுமா?




பா.ஜ.க. அரசை கண்டித்து சாலை மறியல்:


அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிஐடியூ, எஐசிசிடியூ,  எல்டியுசி, ஐஎன்டியூசி, எல்பிஎப், எஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் மற்றும் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,


Nawazuddin Siddiqui: ரஜினி படத்தில் வசனம் புரியாம நடிச்சேன்: சம்பளம் வாங்கியதால் குற்றவுணர்ச்சி: நவாசுதீன் சித்திக் கவலை!




100 நாள் வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாக்கி, தினக்கூலியாக ரூபாய் 600 வழங்கிட வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயும் மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  


Dharmapuri Robbery: 4 கடைகளில் மேற்கூரையை உடைத்து ரூ.3.10 லட்சம் கொள்ளை; தருமபுரியில் தொடரும் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சி




சாலை மறியல்:


இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் நகரின் முக்கிய பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர்ந்து மாற்று பாதையில் போக்குவரத்து காவல்துறையினரால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.  பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


TN 11th 12th Hall Ticket: 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித் தேர்வர்களுக்கு பிப்.19-ல் ஹால்டிக்கெட்- பெறுவது எப்படி?