மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் வெடி வெடித்து, நடனமாடி அங்குள்ள குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.


தீபாவளி பண்டிகை 


தீபாவளி பண்டிகை என்பது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு பண்டிகை. இருப்பினும் பொங்கல் போன்ற மற்ற பண்டிகைகள் போல இல்லாமல் தீபாவளி பண்டிகை சற்று காஸ்ட்லி பண்டிகையாகவே இருந்து வருகிறது. இதனால் செல்வந்தர்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு நடுத்தர குடும்பத்தினருக்கும், ஏழை எளிய வர்க்கத்தினருக்கு இந்த இனிப்பு பண்டிகையானது சற்று கசப்பான பண்டிகையாகவே எண்ண தோன்றுகிறது.


Diwali 2024:தீபாவளி வந்தாச்சு...அன்புக்குரியவர்களுக்கு அசத்தலாக பரிசளிக்க சில டிப்ஸ்!




ஏங்கும் வர்க்கம் 


அதிலும் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள், ஊரே கோலாகலமாக பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகளை உண்டும் மகிழ்ச்சியில் திளைக்க தங்களுக்கும் உறவினர்கள் இருந்திருந்தால் இவ்வாறு தீபாவளி மகிழ்ச்சி பொங்க கொண்டாட செய்திருப்பார்களே என்று ஏங்கும் வர்க்கம் ஏராளம் ஏராளம் உண்டு.


Royal Enfield Bear 650: வெறித்தனம் - ராயல் என்ஃபீல்டின் பியர் 650 மீட்டார் சைக்கிள் அறிமுகம், பீஸ்ட் மோட் அம்சங்கள்




முன்வந்த சமூக ஆர்வலர்கள் 


இந்த சூழலில் அவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க தீபாவளியை தித்திக்கும் தீபாவளியாக மாற்ற பல சமூக ஆர்வலர்களும் அன்புள்ளம் கொண்டவர்களும் தற்போது உதவி கரம் நீட்டி வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு தீபாவளி என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வரும் புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்களை வழங்கி கொடுத்து அவர்களுடன் ஆடிப்பாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.


Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி




அன்பகம் காப்பகம்


மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அன்பகம் காப்பகம். இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றுசேர்ந்து அவர்களது ஏற்பாட்டில் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். 


November 2024 bank holidays: ரவுண்டா 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை - தமிழ்நாடு உட்பட மாநில வாரியான நவம்பர் மாத லிஸ்ட் இதோ




சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்எல்ஏ 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ( காங்கிரஸ்) ராஜகுமார் கலந்து கொண்டார். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்டவை வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் அதனை வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்களின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.


New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை