தீபாவளி வந்தாச்சு. சொந்தங்கள், நண்பர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று திட்டமிடுபவர்களுக்கு எளிதான ஐடியாக்கள் இதோ!
தீபாவளி 2024 (Diwali 2024)
இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
பூஜை நேரம்:
அக்டோபர் 31-ம் தேதி வியாழன் கிழமையன்று நல்ல நேரத்தில் இறை வழிபாடு செய்வது நல்லது. ராகு காலம் தவிர்த்து அன்றய நாளில் பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை அகற்றலாம் என்பதும் நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகை ஸ்பெசல். குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள், சாப்பாடு என மகிழ்ச்சியாக கொண்டாடுப்படும். இனிப்பு,புத்தாடை என என பரிசளிப்பதோடு கூடுதலாக இன்னும் சில ஆப்சன்கள் இருந்தால் நல்லாயிருக்கும் இல்லையா!
- நண்பர்கள், அன்பிற்குரியர்கள் என அவர்களுக்கு விருப்பமானதை பரிசாக வழங்குவது நல்லது. புத்தாடை, அவர்கள் ரொம்ப நாளாக வாங்க வேண்டும் என்ற நினைத்த டிரெஸ்,. வாட்ஸ், புத்தகம், எலக்ட்ரானிக் பொருள் என வாங்கி பரிசளிக்கலாம்.
- இனிப்பு வகைகள் பரிசாக கொடுக்கும்போது வீட்டில் செய்தவற்றை அல்லது செயற்கையான பொருட்கள் சேர்க்காத இனிப்புகளை வழங்கலாம்.
- ஆரோக்கியமான இனிப்பு வகைகள், முருக்கு, உள்ளிட்டவற்றை வழங்கலாம். பழங்கள், இறைச்சி, காய்கறி என அவர்களின் ஆரோக்கியம் கருதியும் பரிசு வழங்கலாம். இனிப்பு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்றில்லை.
- பாதாம், முந்திரி, திராட்சை, அத்திப் பழம், பிஸ்தா உள்ளிட நட்ஸ் வகைகளை பரிசாக வழங்கலாம். சூரியகாந்தி விதை, பூசணி விதை உள்ளிட்டவற்றையும் வழங்கலாம்.
- உடற்பயிற்சி செய்வதை ஊக்கும்விக்கும் பொருட்டு உங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு ஜிம் மெம்பர்ஷிப் வழங்கலாம். உடற்பயிற்சி சாதனங்கள் ஏதாவது பரிசளிக்கலாம்.
- வீட்டு உபயோகப் பொருட்கள், உடை, அணிகலன், தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் வழங்கலாம்.
- வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்க செடிகள் பரிசாக கொடுக்கலாம். மூலிகைச் செடிகள், காய்கறி செடிகள், பூச்செடிகள் என வழங்குவது சிறப்பாக இருக்கும்.