மயிலாடுதுறை அருகே 70 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் , வகுப்பறையில் அமர்ந்து கரும்பலகையில் எழுதி தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் பழமையும், பாரம்பரியமும் மாறாமல் ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் தூ.ராம.சித அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயின்ற பெரும்பான்மையானோர் அரசு மற்றும் தனியார் பணிகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயிகளாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். 


கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமுதாயம் என அறிவித்த வழக்கு; தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு




இந்த சூழலில் 70 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அப்போது இப்பள்ளியில் 1960 காலகட்டங்களில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அப்போது பயின்ற முன்னாள் மாணவர்கள் பெரும்பாலனோரை தொடர்பு கொண்டு ஒன்றிணைந்தனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு படையெடுக்க அவர்களை தற்போது அப்பள்ளி கற்பிக்கும் பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் எழுது பொருட்களை வழங்கி, மேலும் அன்பளிப்பாக பள்ளிக்கு பீரோவை பரிசளித்தனர்.


Ather 450 Apex: வெளியானது அபெக்ஸ் 450 மாடல் - ஏதர் நிறுவனத்தின் அதிவேக ஸ்கூட்டர், புதுசா என்ன இருக்கு? விலை என்ன?




தொடர்ந்து, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், கரும்பலகையில் திருக்குறள் உள்ளிட்ட வாசகங்களை எழுதியும், கூட்டாக செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். அப்போது தாங்கள் படிக்கும் காலத்தில் கைக்குத்தல் அரிசியை கொண்டு, பள்ளி வளாகத்தில் தாங்கள் பராமரித்து வளர்த்து வந்த காய்கறிகளை பயன்படுத்தி மதிய உணவினை சமைத்து சாப்பிட்ட நினைவுகள் இன்றளவும் மறவாது என பழைய நினைவுகளை ஆனந்தத்துடன் பகிர்ந்து கொண்டனர். 


Election 2024: தொகுதிப் பங்கீட்டில் I.N.D.I.A : காங்கிரஸை சுத்துபோடும் கூட்டணிக் கட்சிகள்; விட்டுப்பிடிக்கும் முனைப்பில் ராகுல் காந்தி