சீர்காழி அருகே இருசக்கர வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்
நாடுமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய சாலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை என்பது சிறிதும் குறைந்தபாடில்லை.
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
விபத்துக்கான முக்கிய காரணிகள்
அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு, தலைகவசம் அணியாமல் செல்வது, மோட்டார் வாகன விதிமுறைகளை சிறிதளவு மதிக்காமல் செல்வது உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.
புதிதாக கட்சி தொடங்குவோர்கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர்''- விஜயை சாடிய முதல்வர் ஸ்டாலின்?
நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ் குமார், சதீஷ்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் திருமுல்லைவாசல் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது விநாயககுடி என்ற இடத்தில் வந்த போது அங்குள்ள வளைவில் திரும்பியுள்ளனர். அதில் நிலைதடுமாறி எதிரே திருமுல்லைவாசல் நோக்கி வந்த தனியார் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!
காவல்துறையினர் விசாரணை
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான சதீஷ்குமார், 17 வயதான சந்தோஷ் குமார் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மகேஷ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் காவல்துறையினர், இறந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.