Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்ட உதவி செயற் பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவெண்காடு துணை மின்நிலையத்தில் நாளை 05.11.2024 செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் திருவெண்காடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மணிக்கிராமம் உயரழுத்த பாதையில்
Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!
மின்நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
திருவெண்காடு, தருமகுளம், வாணகிரி, பூம்புகார், பெருந்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டா பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் சீர்காழி கோட்டத்தில் நாளை 05-ம்தேதி செவ்வாய்கிழமை அன்று ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணைமின் நிலையங்களில் இருந்து செல்லும் 11KV தாண்டவன்குளம் மற்றும் 11KV மாதிரவேளூர் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட இரண்டு உயரழுத்த மின்பாதைகள் வழியாக மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடக்காரமூலை, பழையபாளையம், கொட்டாய்மேடு, தாண்டவன்குளம், எருக்கூர், புத்தூர், சோதியக்குடி, மாதிரவேளூர், சேந்தங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கோட்டம்
மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருவாரூர் ரோடு, சீனிவாசபுரம், குமாரகட்டளை தெரு, ரேவதி நகர், மீன் மார்க்கெட், திருமஞ்சன வீதி, கூறைநாடு, அறுபத்துமூவர்பேட்டை, பூக்கடை தெரு, அண்ணா வீதி, காவிரி நகர் பெரம்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பெருஞ்சேரி, கிளியனூர், அகர வல்லம், குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினையாகும் பெறும் குத்தாலம் டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.