சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுமுறைக்குப் பிறகு பள்ளி மீண்டும் இன்று (நவம்பர் 4) திறக்கப்பட்டது. எனினும் மீண்டும் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


சென்னை, திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு மேல் தளத்தில் பள்ளியின் வேதியியல் ஆய்வகம் இயங்கி வருகிறது. 


பள்ளிகளுக்கு விடுமுறை


இதில் இருந்து வாயு கசிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு திரண்ட பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.


திருவொற்றியூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அதேபோல அம்மோனியா வாயு கசிந்துள்ளதா என்று காண தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பள்ளிக்குச் சென்றனர். 


அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புக் கருதி பள்ளி மாணவர்கள் அனைவரையும் நிர்வாகம் வெளியேற்றியது. தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


விடுமுறைக்குப் பிறகு பள்ளி மீண்டும் இன்று (நவம்பர் 4) திறக்கப்பட்டது. எனினும் மீண்டும் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


அதிகாரிகள் ஆய்வு


இதனால் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டமாக மாறும் சூழலில், பள்ளி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு அதிகாரிகள் தற்போது ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.