சீர்காழி புதிய பேருந்து நிலையம் வருவதற்காக பயன்படுத்தி வந்த பொது பாதை அடைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு வியாபாரிகளும் அவதியடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலைய சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது.


Krithi Shetty: விஜய் பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி கண்களை கட்டிப்போட்ட க்ரித்தி ஷெட்டி: வைரலாகும் வீடியோ!




இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் பேருந்தும், பயணிகளும் உள்ளே சென்று வர எவ்விதமான இடையூறு இன்றி நடைபெற்று வருகிறது.


Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!




இந்த சூழலில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வர சுற்றி கொண்டு நெடுந்தூரம் செல்லாம் சட்டைநாதர் காலணி தெரு வழி உள்ள பாதையினை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்த பாதையில் பல லட்சம் ரூபாயில் அரசு சார்பில் வாய்க்காலை கடப்பதற்கு காங்கிரீட் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் அவ்வழியாக வரும் பொதுமக்களை நம்பி சட்டைநாதர் காலணி தெருவில் ஏராளமான சிறு வணிகங்கள், ஃபேன்ஸி ஸ்டோர், மருந்தகம், காலணி, ஃபோட்டோ ஸ்டுடியோ, உணவகம் கடைகளை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.


Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு - விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!




இந்த சூழலில் தற்போது பேருந்து நிலைய மேம்பாட்டு பணிக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாத அந்த பாதையினை தகர சீட் கொண்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அடைந்துள்ளார். இதனால் அவ்வழியே பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களின் வருகை இல்லாததால் அப்பகுதியில் கடைகள் வைத்து நடத்தி வந்த சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அடைக்கப்பட்ட பாதையினை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


1500 ஆண்டுகள் பழமையான வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு