க்ரித்தி ஷெட்டி


உப்பேனா என்கிற தெலுங்கு படத்தில் தனது 17 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. தனது முதல் படத்திலேயே தென் இந்திய சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து நானி நடித்த ஷியாம் சிங்கா ராய், லிங்குசாமி இயக்கிய வாரியர், வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார்.


வாரியர் மற்றும் கஸ்டடி ஆகிய இரு படங்களும் பெரிய அளவிலான வெற்றி அடையவில்லை என்றாலும் க்ரித்தி ஷெட்டியின் மீதான ரசிகர்களின் கவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக விதவிதமான காஸ்டியூம் அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது என தினசரி செய்திகளில் இடம்பிடித்து விடுவார். 


அரபிக் குத்துப் பாடலுக்கு பெல்லி டான்ஸ்


இந்நிலையில், புகைப்படங்களுக்கு அடுத்தபடியாக நடனத்தில் இறங்கி ரசிகர்களை வசியம் செய்துள்ளார் க்ரித்தி ஷெட்டி. விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்துப் பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி அவர் வெளியிட்டுள்ள வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் சப்ஜெக்ட். ஒரு பாட்டின் அனைத்து தாளங்களுக்கும் இடுப்பை மட்டுமே அசைத்து ஆடும் சவாலான இந்த பெல்லி டான்ஸை அனாயாசமாக அவர் ஆடுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.






 


நடித்து வரும் படங்கள்


தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே சமயத்தில் அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து உருவாகும் பான் இந்தியப் படமான ’அஜயண்டே ரெண்டாம் மோஷன்’ , ஜெயம் ரவி நடித்து வரும் மற்றொரு பான் இந்தியப் படமான ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் எல்.ஐ.சி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.




மேலும் படிக்க : Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை - ஒய்.ஜி மகேந்திரன்


சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற பாடகி: மேடைக்கு வந்த திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாத அப்பா: சூப்பர் சிங்கர் 10ல் நெகிழ்ச்சி