இந்து மதத்தில் தை மாத அமாவாசை மற்றும் கடை வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் இறை வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இதனை அடுத்து நேற்று தை அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையை இரண்டு ஒரேநாளில் வந்ததை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுது.




மூவலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் திருவிழா


தை கடைசி வெள்ளியை முன்னிட்டு மூவலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தைக்கடை வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை அடுத்த மூவலூர் கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.




பால்குடம் விழாவை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து வேப்பிலை கரகம் முன்னே செல்ல அதனை தொடர்ந்து பால்குடம், அலகு காவடி ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட 54 வது  நாமத்வார்


ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மந்திர கீர்த்தனை செய்வதற்கு GOD நிறுவனம் உலகின் ஆறு நாடுகளில் 53 நகரங்களில் நாமத்வார் எனப்படும், பிரார்த்தனை கூடங்களை அமைத்துள்ளது. 54 வது நகரமாக மயிலாடுதுறையில் புதிய பிரார்த்தனை கூடம் இன்று துவக்கப்பட்டது. ஸ்ரீ  ஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாமாத்வாரை திறந்து வைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தை கடை வெள்ளி மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரம் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.




பழமைவாய்ந்த தர்மராஜ மாரியம்மன் கோயில் 59-ம் ஆண்டுதீமிதி திருவிழா


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் கொடுக்கும் பழமைவாய்ந்த  தர்மராஜ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா வெகு விம்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை கொடி ஏற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. 




இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவ திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து திரளான பெண்கள் உட்பட 500 -க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 




இதனை தொடர்ந்து  மாலை புரவாய்க்காலில் இருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல தாளங்கள் முழங்க வருகை புரிந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.