சீர்காழி அருகே தாய் மகன் இடையை நடைபெற்ற சண்டையை விலக்கிவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் மண்டையை மகன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான தமிழ்ச்செல்வி. இவரது மகன் 25 வயதான அன்பு தமிழ் சாகர், குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின் நூறு நம்பருக்கு கால் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.


Tamil Movie Re-release: மீண்டும் ஹிட்டடிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்: புதுக்கதைக்கு பஞ்சமா? கொக்கரிக்கும் கோலிவுட் வட்டாரங்கள்!




இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்போது வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தெருவில் தாயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த மகன் அன்பு தமிழ் சாகரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அன்பு தமிழ் சாகர் தான் தன் தாயிடம் சண்டை போடுவதை, நீ யார் கேட்க என கூறி அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறப்பி உதவி ஆய்வாளர் சீனிவாசனின் தலையில் பலமாக அடித்துள்ளார்.


Vendhaya Keerai Chutney : வெந்தய கீரையில் சுவையான சட்னி.. இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்..





இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த சீனிவாசன் ரத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கிய அன்பு தமிழ் சாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Mansoor Ali Khan: மன்சூர் அலிகானுக்கு எதிராக கொதித்தெழுந்த வழக்கறிஞர்.. எல்லாம் அந்த சில பேரால் தான்..!