சீர்காழி அருகே பாம்பு நுழைந்ததால் காரை முழுவதும் பிரித்து போட்டும் பாம்பு பிடிவீரரை கொண்டும் பாம்பை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


விவசாயிகளின் நண்பன் 


மயிலாடுதுறை மாவட்டம் டெல்டா கடைமடை மாவட்டம் ஆகும். இங்கு வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமே அதிகம். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாகவும் விவசாயம் விளங்கி வருகிறது. பெரும்அளவு விவசாய நிலங்கள் என்பதால், விவசாயிகளின் நண்பன் ஆன பாம்புகள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இவைகள் விவசாயத்தை சீர்குலைக்கும் எலி, பூச்சி உள்ளிட்ட வற்றை உண்டு அவர்களுக்கு தன்மை ஏற்படுத்தினாலும், இவைகள் பல நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சில சமயங்களில் மனிதர்களை கடித்து அதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.


Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?


காருக்குள் புகுந்த பாம்பு 


மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, இவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரில் உள்ளே நேற்று மாலை நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.  இதனை அறியாமல் காரில் ஏறி அமர்ந்த போது ஊஷ் ஊஷ் என காரின் உள்ளே சத்தம் கேட்டுள்ளது. அதனை அடுத்து பாலாஜி காரின் உள்ளே பார்த்த போது,  நல்ல பாம்பு  ஒன்று இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர்.


VK Pandian Retirement: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் திடீர் அறிவிப்பு...ஒடிசா அரசியலில் பரபரப்பு


அக்கு அக்காக பிரிக்கப்பட்ட சொகுசு கார் 


அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாம்பு பிடிவீரர் பாண்டியன் பாம்பை பிடிக்க  முயற்சித்தார். அப்போது பாம்பு சீட்டுக்கு அடியில் நுழைந்ததுள்ளது, அதனால் பாம்பை பிடிப்பதற்காக காரில் உள்ள நான்கு சீட்டுகளையும் கழட்டி பாம்பை பிடிக்கலாம் என்றால் அங்கு பாம்பு தென்படவில்லை, நீண்ட நேரமாக பாம்பு இருக்கும் இடம் தெரியாமல் தவித்த நிலையில், பாம்பு இன்ஜினுக்குளே புகுந்தது தெரியவந்தது.  அதனை அடுத்து பல மணி நேரம் போராடியும்  பாம்பை பிடிக்க முடியாமல் தவித்தனர். 


Vijay Sethupathi: அவ்வளவு செட்கள்.. பலர் கற்பனைக்கு உருவம் கொடுத்தவர்.. ராமோஜி ராவைப் பற்றி சிலாகித்த விஜய் சேதுபதி!


இந்நிலையில் பாம்பு புகுந்த வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றதால்  தொடர்ந்து பாம்பை பிடிக்க நேரம் இன்றி காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, பாம்பு காரைவிட்டு வெளியேறினால் அதனை அறிந்து கொள்ளும் விதமாக காரை சுற்றியும் மணல் போட்டு வைத்து விட்டு, அனைவரும் திருமணத்திற்கு கிளம்பி சென்றனர். பாம்பால்  காரையே அங்குலம் அங்கலமாக பிரித்து போட்டது தான் மிச்சம். பாம்பை பிடித்தபாடு இல்லை.


Vijay Sethupathi: பாய்ஸ் மணிகண்டனை காப்பாத்தும் நோக்கம் எனக்கு இல்லை.. மகாராஜா பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி!