மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் முகத்துவாரம் துகர்ந்து போனதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
திருமுல்லைவாசல் மீனவர் கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 1500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 1000 -க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இதன் மூலம் இப்பகுதி இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறது.
கடலுடன் கலக்கும் பக்கிங்காம் கால்வாய்
இந்த கிராமத்தின் கடற்கரை முன்பு உப்பனாறும் மற்றும் பக்கிங்காம் கால்வாய் இணையும் பகுதியாக அமைந்துள்ளது. இந்த ஆறு மூலம் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பதிப்பை தடுத்து வெள்ளம் கடலில் சென்று வடிகாலாக இந்த ஆறு செயல்படுகிறது. சுனாமி ஏற்பட்ட நேரத்தில் கூட இந்த ஆறு அமைந்த காரணத்தால் அதன் பாதிப்பு இதன் மூலம் சற்று குறைந்தது. மேலும் இந்த ஆறு கடலில் கலக்கும் முகத்தூவாரம் வழியாக இக்கிராம மீனவர்கள் படகுகளை கடலுக்கு செலுத்தி மீண்டும் ஊருக்குள் திரும்பி படகுகளை பத்திரமாக கரை பகுதியில் அமைந்துள்ள படகு துறைமுகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தூர்ந்து போன முகத்தூவாரம்
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரம் மணல் அதிகளவில் சேர்ந்து துகர்ந்து போனதால் மீனவர்கள் படகுகளை இயக்குவதில் சிரமப்பட்டு வருகின்றனர். படகுகள் மணலில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்களும் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற மேலும் படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படாமல் குறிப்பாக விசை படகு களை முற்றிலும் இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீன வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முகத்துவாரம் துகர்ந்து விட்டதால் அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு வேலை கிடைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை
இதனை அரசு கவனத்தில் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு முகத்துவாரத்தை விரைந்து தூர்வாரி தர வேண்டு மென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக முகத்துவாரத்தை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.