5 வது நாளாக தேடுதல் வேட்டை 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து வனத்துறையினர் மற்றும் காவல்துறை தீவிர தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மயிலாடுதுறை ரயில்வே நிலையம் பகுதிகளிலும் சிறுத்தை நடமட்டம் தென்படுவதாக அங்கும் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு, 7 கூண்டுகள் வைத்தும், 30 சென்சார் கேமராக்கள் பொருத்தியும் தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 


Anand Mahindra: அலெக்ஸாவுக்கு ஆணை.. குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய சிறுமி.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!




பல்வேறு முயற்சிகள் 


இந்நிலையில் சென்னையில் இருந்து கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் நேற்று மயிலாடுதுறைக்கு வந்திருந்து எட்டு மோப்ப நாய்கள், வேட்டை நாய்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வனத்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவாகியது. அந்த புகைப்படத்தை 3 நாட்களுக்கு பிறகு நேற்று மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர். மேலும் நேற்று இரவு ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய ஆறு இடங்களில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டது. 


Astrologer on PM Modi: அடுத்த முறையும் மோடிதான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார் - ஜோதிடர் போட்ட ட்வீட்




சிறுத்தையின் மலமா...?


இந்நிலையில் வைக்கப்பட்ட எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில், கேமராக்களில் அதன் உருவம் தென்படவில்லை, இந்த சூழலில் மயிலாடுதுறை ரயில்வே  நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் பாலம் கீழே சிறுத்தையின் தடங்கல் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் நீலகிரி பொம்மன், களான் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் தெரியாத நிலையில்  காவிரி ஆற்றில் முடியுடன் கூடிய மலத்தை கைப்பற்றியுள்ளனர். 


IPL Points Table: டாப்பில் இருக்கும் ராஜஸ்தான்; வெற்றிக்கணக்கைத் தொடங்காத மும்பை.. புள்ளிப்பட்டியல் இதோ!




இந்த மலம் சிறுத்தை மலம் போன்று இருப்பதால் அதை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்று உள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகளை எடுத்துச் சென்று அதில் ஏதேனும் சிறுத்தையின் புகைப்படம் இருக்கிறதா? என்றும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் ஐந்து நாட்கள் ஆகிய நிலையில் சிறுத்தை சிக்காத நிலையில், அதனை டிராக் செய்து பிடிப்பது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இதனால் மயிலாடுதுறை மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Lok Sabha Election 2024: மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. கை விரலை வெட்டி வேண்டிக்கொண்ட பாஜக ஆதரவாளர்