சென்னை வானொலியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதிநேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


பகுதிநேர அறிவிப்பாளர்கள்


தொகுப்பாளர்கள்


கல்வித் தகுதி:



  • இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 

  • தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். வானொலி நிலையத்திற்கு அருகில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • நல்ல குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் ஒலிபரப்பில் ஆர்வமும் பொது அறிவுத் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


சென்னை வானொலியின் விவித் பாரதி, FM Gold, மத்திய அலைவரிசை 720 KHz, 101.4 MHz பண்பலை இணை ஒலிப்பரப்பில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும் தொகுத்து வழங்கவும் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை:


இதற்கு எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று அடுக்கு தேர்வு முறையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சிகளின் தேவைக்கு ஏற்ப பகுதி நேரப்பணிக்கு அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள். 


விண்ணப்ப கட்டணம்:


இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.345/-. பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.266/- GST உடன் சேர்த்து செலுத்த வேண்டும். 


விண்ணப்பக் கட்டணத்தை பெயர் மற்றும் CCA Audition -2024 என குறிப்பிட்டு PRASAR BHARATI வங்கி கணக்கில் NEFT மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


PRASAR BHARATI வங்கி கணக்கின் விவரம்:


வங்கியின் பெயர் - : STATE BANK OF INDIA


வங்கிக் கிளை : MYLAPORE


வங்கிக்கணக்கு எண்: 10476542131


 IFSC CODE எண்: SBIN0000965


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். உரையின் மீது “பகுதிநேர அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பம்” என்று குறிப்பிட வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை வானொலி நிலையத்தில் கடைசி தேதிக்குள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். 


முகவரி:


THE HEAD OF PROGRAMMES 
PROGRAMME CO-ORDINATION SECTION 
ALL INDIA RADIO,
 KAMARAJAR SAALAI, 
MYLAPORE, CHENNAI - 600004


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.08.2024


மேலும் விவரங்களுக்கு  facebook.com/airchennai, instagram.com/airchennai,மற்றும் twitter.com/airchennai -  ஆகிய வலைதளங்களை பார்த்து அறியலாம்.