மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணையின் அடிப்படையில் செவிலியர் ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை
மயிலாடுதுறை மாவட்ட ஏழை எளிய மக்களின் முக்கிய மருத்துவமனையாக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இங்கு கட்டடங்கள், எம்ஆர்ஐ ஸ்கேன் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Thalapathy 69 : தளபதி 69 படக்குழு அப்டேட்..விஜயின் கடைசி படத்தில் இணைந்த கெளதம் மேனன்
இருப்பினும், இந்த மருத்துமனையில் 40 மருத்துவர்கள் பணியிடங்களில் வெறும் 15 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், இது போன்ற ஸ்கேனிங் எடுப்பதற்கும் அது தொடர்பான டெக்னிசியன்கள் இன்றி பல ஆண்டுகளாக அதுவும் பயனற்று இருந்து வருகிறது. இந்நிலையில் எழை எளிய மக்கள் இங்கு நாள்தோறும் மயிலாடுதுறை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வந்து உள் நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடரும் அவலம்... இருளர் சமூக ஊராட்சி மன்ற தலைவி தர்ணா! நாற்காலியில் அமர வைக்காமல் அவமதிப்பு...
வைராலான ஊசி வீடியோ
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரே சிரஞ்சியினை பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வைரலானது.
திமுக வாரிசு கட்சி.. அதிமுக ஜனநாயக கட்சி.. முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தாக்கு
ஆதாரத்துடன் புகார்
தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் அவர் தனது தாயார் கல்யாணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த மாதம் செப்டம்பர் 27-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பணியில் உள்ள செவிலியர்கள் ஒரே சிரஞ்சை பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக குற்றம்சாட்டி செல்போனில் வீடியோ எடுத்து செவிலியரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வீடியோவில் உண்மைத்தன்மை
அவரின் குற்றசாட்டுக்கு தான் செய்யவில்லை என்று செவிலியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை சமூகவலைதளங்களில் ஹரிஹரன் பதிவிட்டதோடு மயிலாடுதுறை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் நேரிடையாக புகார்மனு அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் அதில் உண்மை தன்மை இருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செவிலியர் பணியிடை நீக்கம்
அதன் அடிப்படையில் இச்செயலை செய்த செவிலியர் ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்தும், அவர்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களில் எந்த செவிலியர்களும் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடும்பட்சத்தில் தொடர்புடைய செவிலியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.