மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெயை  தரையில் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அரசு தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்கி பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வலியுறுத்தியும், கடந்த ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து பாதிப்பு ஏற்பட்டு இழப்பீடு வழங்காமல் விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


Lok Sabha Constituency TN: தமிழ்நாட்டின் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள், எந்தெந்த மக்களவை தொகுதியில் அடங்கும் தெரியுமா?




தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பல வெளிநாடுகளில் என்ஜின் ஆயிலாக பயன்படுத்தும் பாமாயிலை இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் ரேசன் கடைகள் மூலம் சமையல் எண்ணெய்யாக வழங்குவது வேதனையளிப்பதாகவும், பாமாயிலை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வருவதாக பல ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக கூறிய விவசாயிகள் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பாமாயில் எண்ணெய்யை தரையில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 


Russia Vladimir Putin : ரஷிய அதிபர் புதினை படுகொலை செய்ய சதி.. கதிகலங்க வைத்த எலான் மஸ்க்!




ரேசன் கடைகளில் வழங்கக்கூடிய பாமாயில் எண்ணெய்யை தடை செய்து தமிழகத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யக்கூடிய தேங்காய் கடலை, எள்ளு ஆகியவற்றை விவசாயிகளிடமிரந்து கொள்முதல் செய்து ரேசன் கடைகள் மூலம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பாமாயிலை தரையில் ஊற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.


Mallika Rajput:பிரபல துணை நடிகை மல்லிகா ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் - போலீசார் தீவிர விசாரணை