சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும்  சம்பவங்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 'ரிவால்வர் ராணி' படத்தில் அவருடன் உடன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மல்லிகா ராஜ்புத். விஜயலட்சுமி என அழைக்கப்படும் மல்லிகா ராஜ்புத் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர். இவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.


 



மல்லிகாவின் தற்கொலை :


உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் நடிகை மல்லிகா ராஜ்புத். அவருக்கு வயது 35. மல்லிகா ராஜ்புத் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்து அவரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


 


மல்லிகா ராஜ்புத் தயார் :


மல்லிகா ராஜ்புத் தயார் சுமித்ரா சிங் இந்த சம்பவம் குறித்து பேசுகையில் வீட்டில் உள்ள அனைவரும் இரவு தூங்கி கொண்டு இருந்ததால் மல்லிகாவின் இந்த மரணம் எப்போது நடந்தது என தெரியவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. நீண்ட நேரமாக மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தால் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தேன். அப்போது அவள் மின்விசிறியில் தூக்கிட்டு நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து என்னுடைய கணவரையும் மற்றவர்களை எழுப்பினேன் என அதிர்ச்சியுடன் அழுது கொண்டே தெரிவித்துள்ளார் மல்லிகாவின் தாயார் சுமித்ரா சிங். 


 




மல்லிகா ராஜ்புத் யார் ?


2014ம் ஆண்டு நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க துணை கதாபாத்திரத்தில் மல்லிகா ராஜ்புத் நடித்திருந்தார். இவர் ஒரு சில பாடல்களை பாடி வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். மறைந்த பாடகர் ஷான் எழுதிய யாரா துஜே பாடலின் இசை ஆல்பத்தில் தோன்றி இருந்தார். நடிப்பு, பாட்டு மட்டுமின்றி அரசியலிலும் இறங்கி பாரதிய ஜனதா கட்சியில் 2016ம் ஆண்டு இணைந்தார். பின்னர் இரண்டே ஆண்டுகளில் அந்த கட்சியில் இருந்து விலகினார்.  


மல்லிகா ராஜ்புத் ஆன்மீகத்தில் சில நாட்கள் பயணித்தார். அது மட்டுமின்றி கதக் நடன பயிற்சியாளர் மற்றும் தனது சொந்த புத்தகங்களை கூட எழுதியுள்ளார். இப்படி பன்முக திறைமையாளராக இருந்த மல்லிகா ராஜ்புத் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மல்லிகாவின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.