சீர்காழி அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   


ஒருதலைக் காதல் விவகாரம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 58 வயதான கணேசன். இவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் 27 வயதான கலைவேந்தன் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 


Minister Sivanshankar: ”சோழனுக்கு வரலாறு உண்டு, ஆனால் ராமருக்கு கிடையாது” - அமைச்சர் சிவசங்கர் அதிரடி கருத்து




உதவி காவல் ஆய்வாளர் மீது வீசப்பட்ட குண்டு 


இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை கலைவேந்தனிடம் எடுத்து கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் கணேசன் வீட்டிற்கு சென்று, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில் பெட்ரோல் குண்டு வெடித்து வாசலில் அமர்ந்திருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கணேசன் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு போய் சேர்த்து உள்ளனர்.


Loan Against Property: சொத்துக்களை வைத்து லோன் வாங்க திட்டமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்




காவல்துறை விசாரணை 


தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனை அடுத்து கலைவேந்தனிடம் திருவெண்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மட்டும் இன்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch Video: "சாவடிச்சுருவேன்" - தனது அணி வீரரை திட்டிய கேப்டன் அஸ்வின் - ஏன் தெரியுமா?