Loan Against Property: சொத்துக்களை வைத்து லோன் வாங்க முடிவு செய்பவர்கள், அறிந்திருக்க வேண்டிய 5 முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


சொத்து மீதான கடன்:


வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நிதிப்பிரச்னைகளுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்குகின்றன. அந்த வகையிலான பிரபலமான விருப்பங்களில் ஒன்று,  சொத்து மீதான கடனைப் பெறுவதாகும். சொத்துக்கு எதிரான கடன் என்பது உங்கள் சொத்தை பிணையமாகப் பயன்படுத்தும் கடன் தயாரிப்பு முறையாகும். கடனுக்கான பத்திரமாக உங்கள் வீடு, பிளாட் அல்லது நிலத்தை நீங்கள் கொடுப்பீர்கள். நீங்கள் கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் வரை கடன் கொடுத்தவர் சொத்தை உத்திரவாதமாக தன்னிடம் வைத்திருப்பார். ஆனால் கடன் காலத்தில் நீங்கள் சொல்லப்பட்ட சொத்தில் வசிக்கலாம் அல்லது பயன்படுத்தலாம். எனவே, சொத்து மீதான கடன் தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய, 5 முக்கிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


1. வணிக வளர்ச்சிக்கு உகந்த சொத்து மீதான கடன்: 


குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அதிக கடன் தொகைகளை வழங்குவதால், சொத்தின் மீது கடன் வாங்குவது உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என துறைசார் வல்லுநர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் நிதி நிலைமை மற்றும் வணிக இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.


2. குறைந்த வட்டி விகிதங்கள்


வணிக நோக்கத்திற்காக  சொத்து மீதான கடனைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, வட்டி விகிதங்கள் பொதுவாக குறைவாக இருக்கும், இது வருடத்திற்கு சுமார் 8 சதவிகிதத்தில் தொடங்கி, கடனைச் செலுத்துவதை எளிதாக்குகிறது. உங்கள் சொத்தை விற்பது போல் அல்லாமல், சொத்துக்கு எதிரான கடன் உங்கள் சொத்தின் மதிப்பு, உங்கள் கடன் வரலாறு மற்றும் உங்கள் வருமானத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான நிதியைப் பெற உதவுவதோடு, உங்கள் சொத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.


3. 65% வரை கடன் கிடைக்கும்


வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) உங்கள் சொத்து மதிப்பில் 65 சதவீதம் வரை கடன் கொடுக்கலாம். சில சமயங்களில் ரூ 5 கோடி வரை கடன் கொடுக்கலாம். இது உங்களுக்கு நிறைய ஆப்ஷன்களை வழங்குகிறது. மேலும், மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எளிதானது. கடன் வாங்கிய ஒரு லட்சத்திற்கு, வழக்கமாக ரூ.750 முதல் ரூ.900 வரை செலுத்த வேண்டியதாக இருக்கும். சில கடனளிப்பவர்கள் உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப அதிக திருப்பிச் செலுத்தும் விருப்பங்களையும் வழங்குகிறார்கள்.


4. லோனுக்கு முன்பு கணக்கீடுகள் அவசியம்:


தொழில் வளர்ச்சிக்காக சொத்தின் மீதான கடன் வாங்குவது என்பது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, வருமான வரிச் சட்டத்தின் 37(1) பிரிவின் கீழ் செலுத்தப்படும் வட்டி மற்றும் தொடர்புடைய கட்டணங்கள் போன்றவற்றிற்கு வர் விலக்குகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் வணிகத்திற்கான சிறந்த விருப்பத்தைக் கண்டறிந்து, கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் ஒப்பிடுங்கள். 


5. சொத்து மீதான கடன் யாருக்கு நல்லது?


உங்களது கடன் தீரும்போது,  சொத்துக்களைத் தக்கவைத்துக்கொண்டு வணிகத்தையும் வளர்க்க விரும்புவோருக்கு சொத்துக்கு எதிரான கடன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, உங்கள் நிதி நிலைமை மற்றும் வணிக இலக்குகளுக்கு சிறந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.