Minister Sivashankar: ”சோழனுக்கு வரலாறு உண்டு, ஆனால் ராமருக்கு கிடையாது” - அமைச்சர் சிவசங்கர் அதிரடி கருத்து

Minister Sivanshankar On Ramar: அவதாரம் என்றால் பிறக்க முடியாது என ராமரை குறிப்பிட்டு, அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்.

Continues below advertisement

Minister Sivanshankar On Ramar: ராமருக்கு வரலாறே கிடையாது என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ராமருக்கு வரலாறே கிடையாது - அமைச்சர் சிவசங்கர்

சோழர்களின் கட்டடக்கலை, ஆட்சி முறை குறித்து சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில், அரியலூரில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து  அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழனுக்கு  3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது.

ராமன் பற்றி பேசுபவர்களே அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆடித் திருவாதிரை விழா:

"மாமன்னன் இராஜேந்திர சோழன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர்  சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா உள்ளிட்ட்ர பலர் கந்துகொண்டனர்.

ராமரை போற்றிய அமைச்சர் ரகுபதி:

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி, “ முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு முன்பும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்பும் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன். சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்த, உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமா காவியம். கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள்.

சமத்துவம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என பேசி இருந்தார். ஆனால், அதற்கு நேர் எதிராக ராமருக்கு வரலாறே கிடையாது என அமைச்சர் சிவசங்கர் தற்போது பேசியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola