மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றது.


வடகிழக்கு பருவமழை 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெஞ்சால் புயல் உருவாகி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் இன்றும் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.


Toyota Camry New Vs Old: வந்தது டொயோட்டா கேம்ரி, புதுசு Vs பழசு - விலை, அம்சங்கள் ஒப்பீடு, எது பெஸ்ட் எடிஷன்?




வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை


வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இடைவிடாது மழை பெய்தது வருவதால், பொதுமக்கள் பலரும் வீடாடை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி போய் உள்ளனர். இதனால் கூலி தொழிலாளர்கள் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலக்கடலை விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, சம்பாவில் பூக்கும் தருணத்தில் உள்ள நெற்பயிருக்கு பாதிப்பையும், தாளடி பயிரில் பூச்சித் தாக்குதலையும் ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


Year Ender 2024: முடியும் 2024, உலகையே ஆச்சரியப்படுத்திய சம்பவங்கள், ஆண்டின் டாப் 10 நிகழ்வுகள் என்ன?




மாவட்ட நிலவரம் 


மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார் கோவில், தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள 29 கடலோர கிராமங்களில் காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால், சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. முக்கிய கடை வீதிகள், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், கனமழை தொடர்ந்து நீடித்தால், நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Kumbam New Year Rasi Palan: பிறக்கிறது புதிய பாதை! 2025ல் உச்சத்திற்கு போகும் கும்பம் - முடிவுக்கு வரும் துன்பம்




24 மணி நேர மழையளவு


மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 சென்டிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை 22 சென்டிமீட்டர், செம்பனார்கோவில் 18 சென்டிமீட்டர், மணல்மேடு 17 சென்டிமீட்டர், தரங்கம்பாடி 13 சென்டிமீட்டர், சீர்காழி 10 சென்டிமீட்டர், கொள்ளிடம் 8 சென்டிமீட்டர் மழையும் பாதிவாகியுள்ளது. அதிகப்படியான மயிலாடுதுறையில் 22 சென்டிமீட்டர் மழையானதும், குறைந்த பட்சமாக கொள்ளிடத்தில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மீனவர்களும் 3 -வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.