அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, ராசியிலேயே ராகு வந்து அமரும் காலம். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும் தருணம் தான் இது. காற்று ராசியான கும்பத்தில் மாயனான ராகு அமரும் போது, பலவிதமான வித்தைகளை செய்ய தயாராக இருப்பார். நான் விமானத்திலேயே சென்றதில்லை என்பவர்கள் கூட ராகு கேது பெயர்ச்சிக்கு பின்பாக வெளியூர் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல நேரிடும்.
வாருங்கள் கும்ப ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். ஏற்கனவே சென்ற ஆண்டு கலவையான பலன்களை உங்களுக்கு நடைபெற்று இருக்கும். உங்கள் ஜாதகத்தை இந்த சாபத்தின் அடிப்படையில் தான் எழுபத்தி ஐந்து சதவீதம் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. மீதமுள்ளது கோச்சாரத்தின் அடிப்படையில் உங்களுக்கு வந்து சேரும்.
குரு பெயர்ச்சி:
குரு பகவானை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை, மூன்றாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் மாற்ற தயாராக இருப்பார். மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தான் அவரின் தனித்தன்மை. குரு யாரையும் பிரியவிட மாட்டார். பிப்ரவரிக்கு பிறகு மே மாதம் வரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில், புதிய வாகனம் வாங்கி மகிழவும், வேலை வாய்ப்புகளில் சிறப்பான பெயர் எடுக்கவும் உங்களுக்கான காலகட்டம். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீங்கள் நகர உங்களை குரு உந்தித் தருவார். அது தொழில் ரீதியான வெற்றிக்காகவும் இருக்கலாம் அல்லது வியாபாரத்திற்கான அடித்தளமாகவும் இருக்கலாம். பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். புதிய மனிதர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகும் குரு:
கும்ப ராசியை பொறுத்தவரை சிறப்பான இடமான ஐந்தாம் இடத்தில் குரு வருவது மிகப்பெரிய ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டுவரும். லாவாதிபதி என்று சொல்லக்கூடிய குரு ஐந்தாம் இடத்தில் வருவது நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க ஏதுவாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், புதிய வேலை செய்வதற்கான வழிவகை திறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு காதல் திருமணங்கள் கை கூடலாம். திருமணமாகமால் இருக்கும் வரன்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.
ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று பொருளாதாரத்தில் சறுக்கி இருக்கும். உங்களுக்கு புது வருடம் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வரப் போகிறது. கும்ப ராசியை பொறுத்தவரை எதையும் பெரும் அழுத்தத்துடன் எடுத்துக் கொள்ளாமல், இலகுவாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்து அடித்து சாதிப்பது உங்களின் குணம். ஓயாமல் ஓய்வறியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு புதிய பாதைகள் திறக்கப் போகிறது. கடன் தொல்லைகள் இருந்தால் இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த வருடம் பாதிக்கு மேல் உங்களுக்கு கடன் குறையும். புத்திர பாக்கியம் ஏற்படும். அரசு வேலை உண்டு.
ராகு கேது பெயர்ச்சி:
அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே இதுநாள் வரையில் இரண்டாம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு, உங்கள் ராசியிலேயே வந்து அமரப் போகிறார். நான் ஏற்கனவே சொன்னது போலவே ராகு ஒரு சாயா கிரகம். அவர் காற்று தத்துவத்தை உடைய கும்பத்தில் அமரும்போது நிச்சயமாக உங்களை ஒரு பெரிய உயரத்திற்கு தான் கொண்டு செல்வார். ஏழாம் இடத்தில் இருக்கும் போது வாழ்க்கை துணையின் மீது அக்கறை காட்ட வேண்டும். சிறு, சிறு உடல் உபாதைகள் வந்தாலும், பெரிய அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது. கும்ப ராசி அன்பர்கள் அவருடைய வாழ்க்கை துணையிடம் நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ராசிக்கு வந்ததாகவும் பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதோடு உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
செவ்வாய் பெயர்ச்சி:
அன்பார்ந்த வாசகர்களே, கும்பராசிக்கு ஆறாம் வீட்டில் நல்ல இடத்தில் செவ்வாய் நீச்சகத்தில் அமர்ந்து, என்னை எதிர்ப்பதற்கு யார் இருக்கிறார்? என்று உங்களை ஒரு உயர்வான இடத்தில் வைத்து இருப்பார். ஒருவேளை எதிரிகள் மறைமுகமாக தாக்கினாலும் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட போவதில்லை. வருடத்தின் பாதிக்கு மேல் செவ்வாய் ஏழாம் வீட்டில் பணி செய்துதான், புதிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். திருமணம் தொடர்பான நல்ல பேச்சுவார்த்தைகள் சுமூக முடிவுக்கு வரும். ஏழாம் இடத்தில் கேதுவை கட்டுப்படுத்த கொம்பத்தின் பத்தாம் அதிபதி ஏழில் அமர்வது வலிமையான குடும்ப சூழ்நிலையை உருவாக்கும். அரசு வேலை உண்டு. அதேபோல அலைச்சலும் உண்டு. வாழ்த்துக்கள் வணக்கம்.