Year Ender 2024 World Events: நடப்பாண்டில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, கூகுள் தேடலில் முதல் 10 இடங்களை பிடித்த நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


முடிவை நெருங்கும் 2024:


கடந்த 2023 ஆண்டுகளை போலவே, 2024 எனும் நடப்பாண்டும் பல அனுபவங்களையும், வாழ்கைக்கு தேவையான பாடங்களையும் கற்பித்துள்ளது. இதில் பல நல்ல அனுபவங்களும் உண்டு. அதேநேரம், கட்டாயம் மறக்க வேண்டிய சில மோசமான சூழல்களும் அடங்கும். நாளொன்றிற்கு கோடிக்கணக்கான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி அரங்கேறினாலும், எதோ ஒரு சில சம்பவங்கள் தான் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறும். அந்த வகையில், நடப்பாண்டில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, கூகுள் தேடலில் முதல் 10 இடங்களை பிடித்த நிகழ்வுகள்/ நபர்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



2023ல் உலகின் டாப் 10 நிகழ்வுகள்:


1. கோபா அமெரிக்கா


தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா கால்பந்தாட்ட போட்டி, சர்வதேச அளவில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளில் கூகுளில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தமுறை அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.


2. யூரோப்பியன் சாம்பியன்ஷிப்


சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் மிகவும் பிரபலமானதாக கருதப்படும், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டி இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


3.ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை


மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெற்றி பெற்றது.


4. இந்தியா Vs இங்கிலாந்து


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என படுதோல்வி கண்டது. டி20 உலகக் கோப்பையிலும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இணையத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது.


5. லியம் பெய்ன்


ஆங்கில பாடகரான லியம் பெய்ன் கடந்த அக்டோபர் மாதம்,  அர்ஜென்டினா தலைநகர் பலேர்மோவில் உள்ள ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள தனது அறையின் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.


6. டொனால்ட் ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ட்ரம்பும் சர்வதேச அளவில் பெரிதும் தேடப்பட்டுள்ளார். 2020 தேர்தல் முடிவை தொடர்ந்து வெடித்த வன்முறைக்கு பிறகும், அவர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


7. இந்தியா Vs  வங்கதேசம்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், போட்டி ட்ரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.


8. ஐபோன் 16


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 எடிஷன் நடப்பாண்டில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.1.84 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


9. ஒலிம்பிக்ஸ்


விளையாட்டு உலகின் உச்சபட்ச நிகழ்வான பாரிஸ் ஒலிம்பிக் கடந்த 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற்றது. கோலாகலமாக அரங்கேறிய இந்த நிகழ்வினை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


10. கேத்ரின், வேல்ஸ் இளவரசி


வேல்ஸ் இளவரச் கேத்ரின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்பு இயல்பு வாழ்கைக்கு திரும்பியது தொடர்பாகவும் உலக மக்கள் கூகுளில் அதிக அளவில் தேடியுள்ளனர்.