மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு அலுலவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உங்களுக்கு என்ன நீங்கள் அரசு ஊழியர்கள் என்று அரசு பணியில் இல்லாதவர்கள் கூற பலமுறை கேட்டதுண்டு. அவ்வாறு கூறுவதற்கு மற்ற தனியார் மற்றும் சுய தொழிலை காட்டிலும் அரசு வேலையில் செய்பவர்களுக்கு பணிச்சுமை குறைவு, ஊதியம் அதிகம் என்ற தவறான எண்ணமும் தான். ஆனால் அவ்வாறு கூறுபவர்களுக்கு அது தவறு என்று எண்ணும் அளவிற்கு சமீப காலமாக பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் பல தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.


மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பணி வந்த அரசு அலுவலர் 


மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் 58 வயதான மணிக்குமார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பசுபதிகோயில் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ரயில் மூலம் சுமார் 2 மணி நேரம் பயணித்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிக்கு வந்து சென்று வந்துள்ளார். 


Makhana Vs Peanuts:மக்கானா - வேர்க்கடலை; இரண்டில் எது உடல் எடையை குறைக்க சிறந்தது?தெரிஞ்சிக்கோங்க!




அரசு அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை 


இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பணி செய்ய வேண்டி இருந்ததால் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வேளாண் விரிவாக்க மைம அலுவலகத்திலேயே தங்கி இருந்த இவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.


Crime: போலீசுக்கு தெரியாமல் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம்; பல கோடி மோசடி - 2 பேர் கைது




இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த மற்ற அலுவலர்கள் மணிகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.


Waqf Amendment Bill Explained: வக்பு வாரிய மசோதா - அரசுக்கு லட்சக்கணக்கில் மெயில் குவிவது ஏன்? மாற்றத்திற்கான நேரமா?


காவல்துறையினர் தீவிர விசாரணை 


புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகுமாரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Kakathoppu Balaji Encounter: ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் பின்னணி என்ன ? - ஏன் என்கவுன்டர் செய்யப்பட்டார் ?




Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா