தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை மற்றும் அவரது தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


கால்பந்தாட்ட வீராங்கனைகள் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி விக்டர்ராஜ். இவரது மகள்கள் இரட்டை சகோதரிகளான 14 வயதான பியூலா ஹான்சி, பியூலா நான்சி ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். 12 வயது மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ் அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பும் படித்து வந்தார். 


Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!




விளையாட்டு பயிற்சிக்கு சென்ற மாணவிகள் 


மாணவிகள் இருவரும் கால்பந்து விளையாட்டு வீரர்கள், அதனால் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் பங்குபெறுவதற்காக 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு சென்று கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காலை வீட்டில் இருந்து மாணவிகள் இருவரும் தனது தம்பியுடன் காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை அந்தோனி விக்ரந்த்ராஜ் ஒட்டி சென்றுள்ளார். 


Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!




அரசு பேருந்தில் மோதிய இருசக்கர வாகனம் 


அப்போது சங்கரன்பந்தலில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது காராம்பள்ளம் அருகே சாலையின் திருப்பத்தில் எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பியூலா ஹான்சிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டு உயிர்தப்பி உள்ளார். ஆனால் பியூலா நான்சி தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?




அக்கா - தம்பி உயிரிழப்பு 


இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த அந்தோணி விக்ரந்த்ராஜிக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரில் 1 மகள் மற்றும் மகன் என இருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து


மோட்டார் வாகன சட்டத்தில் தீவிரம்


மேலும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகன ஓட்ட கூடாது. அதனையும் மீறி ஓட்டு பட்சத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது பெற்றோர்க்கு சிறை தண்டனை என மோட்டார் வாகன சட்டத்தின் அரசு கடுமையான திருத்தம் கொண்டு வந்தாலும், அதனை நடைமுறை படுத்துவதில் வெளிநாடுகள் போன்று தீவிரம் காட்டினால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.