சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆவணி மாத பிறப்பை அடுத்து சிறப்பு வழிபாடு!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை அடுத்து சிறப்பு கோ பூஜை வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டனர்‌. 

Continues below advertisement

தமிழ் மாதம் ஆவணி பிறப்பை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பழமையான சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாட்டை பக்தர்கள் மேற்கொண்டனர்‌. 

Continues below advertisement

பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம்


கோயிலின் சிறப்புகள் 

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

7.5% இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது : அரசு எச்சரிக்கை!


சிறப்பு கோ பூஜை 

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பன்று சிறப்பு கோ பூஜை நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ் மாதமான ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாடு மற்றும் கன்றினை வலம் வந்து மலர் தூவி வணங்கி சென்றனர். 

TVK: இன்னும் 5 நாட்கள்தான்! த.வெ.க. கொடியை அறிமுகம் செய்யும் விஜய்? ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்

Continues below advertisement
Sponsored Links by Taboola