கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம்

வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பணம் அலங்காரம் செய்யப்பட்டு ஆலையம் முழுவதும் வளையல் தோரங்களால் கட்டப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.

Continues below advertisement

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

Continues below advertisement

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.


அதன் தொடர்ச்சியாக வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பணம் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயம் முழுவதும் வளையல் தோரங்களால் கட்டப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வேம்பு மாரியம்மன் தனலட்சுமி பணம் அலங்காரத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது .



கரூர் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி 5ஆம் வெள்ளியை முன்னிட்டு ஸ்வாமி 108 வெள்ளி கண் விழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆடி 5ஆம் வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் விவிஜி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 108 வெள்ளி கண் விழி அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு ஆலயத்தின் பூசாரி மகா தீபாராதனை காட்டினார்.

ஆடி ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மகா சக்தி மாரியம்மன் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ கருப்பண சுவாமி மூலவருக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola