இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தி எடுக்கும் வெயில் காரணமாக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!
இந்த வெயிலை இப்படி கூடவா பயன்படுத்துவார்கள் என கேள்வி எழும் வகையில், பலரும் வெயிலை பல்வேறு விதமாக பயன்படுத்திவருகின்றனர். அதை தங்களுது சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!
இப்படி, சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியான ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒருவர் தனது வெஸ்பா ஸ்கூட்டரில் தோசை ஊற்றுகிறார். அதற்கு வெஸ்பா தோசை என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.
தனது ஸ்கூட்டரின் இருக்கையில் தோசை மாவை ஊற்றுகிறார். பின்னர், அதை வட்ட வடிவில் பெரிதாக்கி பாதியில் மாவை திருப்பி போடுகிறார். இதில், தோசை பாதி வெந்துவிடுகிறது. வீடியோவின் கேப்சனாக, "ஹைதராபாத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஸ்கூட்டர் இருக்கையில் தோசையை சமைக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
இன்ஸ்டாகிராமில் இந்த விடியோவை பதிவேற்றிய ஒரு சில மணி நேரங்களிலேயே வைரலானது. கிட்டத்தட்ட 39.4 மில்லியன் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். 15 லட்சம் பேர் அதற்கு லைக் போட்டுள்ளனர். இதுபோன்ற பல்வேறு விடியோக்களை மக்கள் சமூகவலைதளங்களில் பகிர்வதும் அது வைரலாவதும் தொடர் கதையாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்