தேனி மாவட்டம் போடி ஜீவா நகரில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் ரமேஷ் (47). இவர் கேரள மாநிலம், உடும்பஞ்சோலையில் மனைவி கிருஷ்ணவேணியுடன் (36) தங்கி, பெயின்ட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊரான போடிக்கு மனைவியுடன் ரமேஸ் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக, கிருஷ்ணவேணி கூறியிருக்கிறார். ஆனால், குடும்பத் தகராறில் ஆணுறுப்பைக் கடித்தும், கழுத்தை நெரித்தும் கணவனைக் கொலைசெய்துவிட்டு, கிருஷ்ணவேணி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போடி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணவேணியிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும் மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த ரமேஷின் உடலில் பல இடங்களில் நகக்கீரல்கள் மற்றும் பல்லால் கடித்த காயங்களும், ஆணறுப்பைக் கடித்திருந்ததும் தெரியவந்தது. அந்த அறிக்கையில், தூக்கு போட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதனடிப்படையில் கிருஷ்ணவேணியிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கணவருக்குச் சொந்த ஊரான போடியிலும், கேரளா, உடும்பன்சோலையிலும் சொத்துகள் இருந்தன. போடியிலுள்ள சொத்தை விற்றுவிட்டு, உடும்பன்சோலையில் மொத்தமாக செட்டிலாகிவிடலாம் எனக் கிருஷ்ணவேணி கூறியதாகவும் ஆனால், கருப்பசாரி அதை மறுத்துவிட்டதாகவும். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்.
மேலும் அவர் அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தியதும், ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுபோதையில் இருந்தபோது கணவரின் கழுத்தை நெரித்தும், ஆணுறுப்பைக் கடித்தும் கொலைசெய்ததாக கிருஷ்ணவேணி ஒப்புக்கொண்டதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்தனர். ஆத்திரத்தில் கொலைசெய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், அக்கம் பக்கத்தினரிடம் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் போடி அரசு மருத்துவமனைக்குக் ரமேஷ்சை கொண்டு சேர்த்திருக்கின்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ரமேஷின் தாயார் அழகம்மாள் கொடுத்த புகாரின்பேரில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கிருஷ்ணவேணியைக் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.